இன்று, இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி தரவுகளை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. இதுவரை வரலாறு காணாத அளவுக்கு, இந்தியாவின் ஜிடிபி, ஜூன் 2020 காலாண்டில், 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

இந்த மிகப் பெரிய ஜிடிபி சரிவுக்கு, கொரோனா வைரஸ் மற்றும் மத்திய அரசு நல்ல எண்ணத்தில் அறிவித்த லாக் டவுன் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், ஜிடிபி சரிந்து வந்ததையும் இங்கு மறுக்க முடியவில்லை.
2017 - 18 நிதி ஆண்டின் நான்கம் காலாண்டான (மார்ச் 2018) காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.2 சதவிகிதமாக இருந்தது. அதன் பின், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபிக்கு தொடர் சரிவு தான்.
2018 - 19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஜூன் 2018) 7.1 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சி கண்டது. 8-ல் இருந்து 7 சதவிகிதம் தானே என யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஒரு சதவிகிதம் வளர்ச்சி குறைவு என்பது கொஞ்சம் பெரிய விஷயம் தானே!
2018 - 19 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (செப்டம்பர் 2018) மீண்டும் 0.9 சதவிகிதம் சரிந்து இந்தியாவின் ஜிடிபி 6.2 சதவிகிதத்தைத் தொட்டது.
ஆக மார்ச் 2018, ஜூன் 2018, செப்டம்பர் 2018 ஆகிய 3 காலாண்டில் மட்டும் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி, 2 சதவிகிதம் நறுக்கென சரிந்தது.
2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஜூன் 2019) மேலும் ஒரு சதவிகிதம் சரிந்து வெறும் 5.2 சதவிகிதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி கண்டது.
2019 - 20 நிதி ஆண்டின் 3-வது காலாண்டில் (டிசம்பர் 2019) மீண்டும் ஒரு சதவிகிதம் என்கிற கணக்கில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி சரிந்து 4.1 சதவிகிதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி கண்டது.
கடைசியில் 2019 - 20 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் (மார்ச் 2020), இந்தியாவின் ஜிடிபி மீண்டும் ஒரு சதவிகிதம் சரிந்து 3.1 % மட்டுமே வளர்ச்சியைப் பதிவு செய்தது. 2019 - 20 நிதி ஆண்டில் மட்டும் 2% ஜிடிபி வளர்ச்சி சரிவைக் கண்டு இருக்கிறது.
மார்ச் 2018 தொடங்கி மார்ச் 2020 இரண்டு ஆண்டு கால கட்டத்துக்குள், இந்தியாவின் ஜிடிபி (காலாண்டு வளர்ச்சி) 8.2 சதவிகிதத்தில் இருந்து 3.1 சதவிகிதத்தைத் தொட்டு இருக்கிறது. ஆக 2 ஆண்டு காலத்தில் 5.1 சதவிகித ஜிடிபி வளர்ச்சி குறைந்து இருக்கிறது.
ஏற்கனவே இக்கட்டான சுழலில் இருந்த இந்திய பொருளாதாரத்தில், கொரோனா வைரஸ் பிரச்சனை வேறு சேர்ந்து கொண்டதால், ஜூன் 2020 காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி 23.9 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications