அங்க எல்லாம் போகாதீங்க ப்ளீஸ்! மத்திய அரசு வேண்டுகோள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வம் கொரோனா மயம் தான். சகலமும் கொரோனா பயம் தான். உலகத்தின் வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்கா கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என அதிபர் ட்ரம்பே சொன்னது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பண பலம் உள்ள, ஒரு நாடே பயப்படும் போது, கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய் எல்லாம் இந்தியாவுக்கு வந்தால் என்ன ஆவது?

எனவே, இந்தியாவில் கொரோனா அதிகம் பரவாமல் இருக்க, நோய் தொற்று கூடுமான வரை கட்டுப்படுத்த, அரசு சில நவடிக்கைகளை எடுத்து இருக்கிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

கொரோன வைரஸ் உலகத்தின் 6 கண்டங்களிலும், சுமாராக 100 நாடுகளுக்கு மேல் பரவி இருக்கிறது. சுமாராக 1,19,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறாகள். 4,300 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த கொரோனா அதிக அளவில் பரவி இருக்கிறது.

பரவல்

பரவல்

வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்பவர்கள், தங்கும் இடத்திலோ அல்லது பேருந்து பயணங்கள், ரயில் பயணங்கள் போன்ற நேரங்களில், தங்களுக்கே தெரியாமல், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு இருந்து இருக்கலாம். இவைகளை எல்லாம் தடுக்கத் தான் இந்திய அரசு ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறது.

போகாதீங்க

போகாதீங்க

இந்தியாவின் மத்திய மருத்துவ மற்றும் சுகாதார அமைச்சகம் சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பன், பிரான்ஸ், ஸ்பெயின் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு தேவை இல்லாமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா

130 கோடி பேரைக் கொண்ட இந்தியாவில், கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 50-ஐத் தாண்டி இருக்கிறது. இதில் 16 நோயாளிகள் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. யாராவது இந்த கொரோனாவுக்கு ஒரு மருந்த கண்டுபிடிங்க சார், முடியல.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian government ask Indians to avoid travel to corona virus hit countries china italy

The Indian government ask the Indian people to avoid travel to corona virus heavily spread countries like china, Italy, France, etc.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X