இனி Ola, Uber-லாம் அவ்வளவு தான்.. மத்திய அரசின் ‘சாகர் டாக்ஸி சேவை தொடக்கம்.!!

மத்திய அரசு தற்போது இந்தியாவின் தனியார் டாக்ஸி சேவைகளுக்கு மாறாக ஒரு புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. "சாகர் டாக்ஸி" (Sahkar Taxi) என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை, Ola, Uber போன்ற பெரிய தனியார் நிறுவனங்களை நேரடியாக போட்டிக்கு அழைக்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தினை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

இனி Ola, Uber-லாம் அவ்வளவு தான்.. மத்திய அரசின் ‘சாகர் டாக்ஸி சேவை தொடக்கம்.!!

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ஓட்டுநர்களின் நலனை பாதுகாக்க மற்றும் நேரடி வருமானத்தை உறுதி செய்வது என்பதுதான். பொதுவாக, Ola, Uber போன்ற தனியார் நிறுவனங்களில், ஓட்டுநர்கள் அந்நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பு தொகையை செலுத்த வேண்டும். ஆனால் சாகர் டாக்ஸி மூலம் ஓட்டுநர்கள் முழுமையாக லாபத்தை பெறுவார்கள். இந்த திட்டம், பயணிகளுக்கு மலிவு கட்டணத்தில் நல்ல சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாகர் டாக்ஸி சேவை தனியார் நிறுவனங்களால் நடத்தப்படாது. ஓட்டுநர்களே இணைந்து ஒரு கூட்டுறவு அமைப்பாக செயல்படுவார்கள். ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கே அதிக நன்மைகள் கிடைக்கும். சாகர் டாக்ஸி சேவையில் பயணிகள் தேவைக்கேற்ப பல்வேறு வகையான வாகனங்களை பயன்படுத்த முடியும். இதில் இருசக்கர வாகனங்கள் (பைக் டாக்ஸிகள்), ஆட்டோ ரிக்ஷாக்கள், மற்றும் நான்கு சக்கர கார்கள் ஆகியவை இருக்கின்றன. பயணிகள் குறுகிய தூரங்களுக்கு விரைவாக செல்ல பைக் டாக்ஸிகளை தேர்வுசெய்யலாம், அதே நேரத்தில் ஆட்டோக்கள் குறைந்த செலவில் வசதியான பயணத்திற்கான விருப்பமாக இருக்கும். மேலும், சாதாரண மற்றும் பிரீமியம் டாக்ஸிகள் இரண்டும் பயணிகளின் வசதிக்கேற்ப வழங்கப்படவுள்ளன. இந்த விருப்பங்களின் மூலம், பயணிகள் தங்களுக்கேற்ப பொருத்தமான மற்றும் மலிவு விலையிலான போக்குவரத்து தேர்வு செய்ய முடியும்.

தனியார் நிறுவனங்களின் கட்டணங்கள் இல்லாததால், ஓட்டுநர்கள் முழு லாபத்தையும் பெறலாம். சர்வதேச நிறுவனங்கள் இதுவரை பெற்றுவந்த லாபம், இந்திய ஓட்டுநர்களிடமே செல்கிறது. இந்த புதிய சேவை, தனியார் டாக்ஸி சேவைகளை விட மலிவான கட்டணத்தில் பயண சேவைகளை வழங்கும். பயணிகள் எந்த வாகனத்திலும் தாங்கள் விரும்பும் வகையில் குறைந்த விலையில் பயணிக்கலாம். இது தனியார் நிறுவனங்கள் போல முழுமையாக லாப நோக்கில் செயல்படாது. அரசு, ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அனைவருக்கும் பயன்படும் முறையில் செயல்படும்.

இந்த திட்டம், Ola, Uber, Rapido, Blue Smart போன்ற தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கலாம். இந்த நிறுவனங்கள் இந்திய சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், ஓட்டுநர்கள் அதிகப்படியான கமிஷன் கட்டணங்களை தனியார் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

சாகர் டாக்ஸி சேவையின் மூலம், இந்த பாதிப்பு இல்லாமல், ஓட்டுநர்கள் நேரடியாக அவர்களின் முழு வருமானத்தையும் பெறலாம். இது, இந்தியாவில் டாக்ஸி மற்றும் கேப் சேவைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.இந்த மாதிரி ஒரு திட்டம் மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

மேற்கு வங்க மாநில அரசு, "யாத்ரி சதி" என்ற சேவையை 2023-ல் அறிமுகப்படுத்தியது. இது முதலில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது, பின்னர் அசன்சோல், துர்காபூர், சிலிகுரி போன்ற நகரங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. பயணிகள் பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் பயன்பாட்டு வசதி பெற்றுள்ளனர். சொந்தமான சேவை உள்ளது. இந்த சேவை கமிஷன் கட்டணங்களைத் தவிர்த்து, ஓட்டுநர்களுக்கு முழு லாபத்தை வழங்குகிறது. பயணிகள் மலிவு விலையில், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த இரண்டு மாநிலங்களின் வெற்றியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவாக்க முடிவு செய்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் பெறும் கமிஷன் கட்டணங்கள் இல்லாததால், ஓட்டுநர்கள் நேரடி லாபத்தை பெற முடியும். தனியார் நிறுவனங்களின் கட்டணங்களை விட மிகக் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம். இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை முறிக்க ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டுறவு முறையில் செயல்படுவதால், அவர்கள் வேலை பாதுகாப்பு மற்றும் நலன்கள் உறுதி செய்யப்படும்.

Take a Poll

இந்த சேவை மொத்தமாக இந்தியாவின் போக்குவரத்து துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். ஆனால், இந்த திட்டம் வெற்றி பெற, பயணிகளின் ஆதரவும், ஓட்டுநர்களின் ஒத்துழைப்பும் முக்கியம். இந்த புதிய சேவை ஏற்கனவே Ola, Uber போன்ற நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படும்.

FAQs
சாகர் டாக்ஸி சேவை என்றால் என்ன?

மத்திய அரசு தொடங்க உள்ள புதிய கூட்டுறவு டாக்ஸி சேவை.

இது Ola, Uber விட என்ன வித்தியாசம்?

ஓட்டுநர்களுக்கு முழு லாபம் கிடைக்கும், தனியார் நிறுவனங்கள் இடையே தடைப்படுத்தப்படாது.

 

எந்த வாகனங்கள் இதில் சேரலாம்?

இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷா, நான்கு சக்கர கார்கள்.

பயணிகள் இதனால் என்ன நன்மை பெறுவார்கள்?

மலிவு கட்டணத்தில் பயணிக்க முடியும்.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+