இந்திய அரசு 2023 - 24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலை இன்னும் சில வாரங்களில் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பற்பல அறிவிப்புகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பல தரப்பினரும் ஒவ்வொரு துறையிலும் எந்த மாதிரியான தேவை உள்ளது என்பது குறித்தான எதிர்பார்ப்புகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளது.
இதற்கிடையில் இந்தியா அரசு டேட்டா காலாண்டரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறித்தான தரவானது, பட்ஜெட் 2023-க்கு பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி டூ பிப்ரவரி
எக்னாமிக் டைம்ஸில் வெளியான செய்தியின் படி, அரசு பல்வேறு தரவுகள் வெளியாகும் நாள் மற்றும் நேரத்தினை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த புதிய காலாண்டரின் படி ஜனவரி மாதத்தில் கடைசி வேலை நாளுக்கு பதிலாக, பிப்ரவரி இறுதியில் பல முக்கிய தரவுகளானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன தரவுகள்
இந்த தரவில் தேசிய வருமானம், சேமிப்பு மற்றும் மூலதன உருவாக்கம், நுகர்வு மற்றும் செலவினங்கள், ஜிடிபி உள்ளிட்ட பலவும் இதில் அடங்கலாம் என தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்வதாக அறிவித்தது. இது முன்னதாக பிப்ரவரியின் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
ஏன் இந்த மாற்றம்
இந்த மாற்றம் 2023 - 24 பட்ஜெட் தாக்கலில் எந்த குழப்பமும் வந்து விடக்கூடாது என்ற நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக ஜிடிபி தரவானது பட்ஜெட்டுக்கு முந்தைய நாளான ஜனவரி 31 அன்று வெளியிடப்படுவதாக இருந்த தேதியில், மாற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 28ல் வெளியாகவுள்ளது.
எதிர்பார்ப்பு
இதற்கிடையில் மார்ச் 2022ல் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்தான தரவானது 8.7% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போது அது திருத்தம் செய்யப்பட்டு 7% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நாமினல் ஜிடிபி விகிதமானது 2023ம் நிதியாண்டில் 15.4% ஆக இருக்கலாம் என்றும், இது 2022ல் 19.5% ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிவிஏ விகிதம்
இதே ஜிவிஏ விகிதம் 2022 - 23ம் நிதியாண்டில் 6.7% ஆக குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2021 - 22ம் நிதியாண்டில் 8.1% ஆக இருந்தது. இது தவிர உற்பத்தி துறையின் உற்பத்தியானது 2022ம் நிதியாண்டில் 9.9%ல் இருந்து, 1.6% ஆக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான வளர்ச்சி விகிதமானது 2023ம் நிதியாண்டில் 9% ஆக எதிர்பார்க்கிறது. இது 2022ம் நிதியாண்டில் 11.5% ஆக குறைந்துள்ளது.
சுரங்கத் துறையில் வளர்ச்சி
இதே சுரங்கத் துறையில் வளர்ச்சி விகிதமானது 2.4% ஆக எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2021 - 22ம் நிதியாண்டில் 11.5% ஆக இருந்தது.
இதுமட்டும் அல்ல பல்வேறு துறைகளிலும் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் சரிவில் காணப்படுகின்றது. இதன் காரணமாக ஜிடிபியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜிடிபி தரவு வெளியாகும் நாளும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications