பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்தியாவின் பொதுக்கடன் அளவு நடப்பு நிதியாண்டின் ஜூன் மாத இறுதியில் 145.72 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் இதன் அளவு 147.19 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதைச் சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொதுக்கடன் அளவு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டுக்கும் 1 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
பொதுக் கடன்
பொதுக் கடன் என்பது வளர்ச்சி நிதியை திரட்ட ஒரு நாட்டின் அரசால் திரட்டப்படும் தொகை, இது அந்நாட்டின் பொதுமக்களுக்குச் செலுத்த வேண்டிய மொத்தப் பணமாகும். இதைப் பொது வட்டி, அரசாங்கக் கடன், தேசிய கடன் மற்றும் இறையாண்மைக் கடன் என்று ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயரில் அழைக்கப்படுகிறது. பொதுக் கடன் என்பது உள்நாட்டிலும் திரட்டப்படலாம்.
மொத்த அரசு கடன்
ஒரு நாட்டின் மொத்த அரசு கடன் என்பது அரசு துறைகள், அமைப்புகளின் முக்கியமான நிதிப் பொறுப்பாகும். ஒரு நாட்டு அரசின் செலவுகள் வருவாயை விட அதிகமாகும் போது பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு பத்திரங்கள் வாயிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் நிதி திரட்டும்.
மொத்த நிகரப் பொறுப்புகள்
2022 ஆம் ஆண்டுச் செப்டம்பர் காலாண்டு இறுதியில் மொத்த நிகரப் பொறுப்புகளில் (liability) 89.1 சதவீதம் பொதுக் கடன்கள் ஆகும். இது ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் இதன் அளவு 88.3 சதவீதமாக இருந்தது என்று மத்திய நிதியமைச்சகம் பொதுக் கடன் மேலாண்மை குறித்து வெளியிட்ட காலாண்டு அறிக்கை தெரிவித்துள்ளது.
5 ஆண்டு
மேலும் தற்போது நிலுவையில் உள்ள பத்திரங்களில் ஏறக்குறைய 29.6 சதவீதம் 5 ஆண்டுகளுக்கும் குறைவான முதிர்ச்சியைக் கொண்டு உள்ளது. அதாவது மொத்த கடனில் கிட்டத்தட்ட 30 சதவீத தொகையை அடுத்த 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.
கடன் திட்டம்
மத்திய அரசு 2வது காலாண்டில் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் சுமார் 4,06,000 கோடி ரூபாயை திரட்டியது, கடன் வாங்குவதாக அறிவிக்கப்பட்ட 4,22,000 கோடி ரூபாய்க்கு எதிரான அளவு தான் இந்த 4.06 லட்சம் கோடி ரூபாய்.மேலும் ரீபேமெண்ட் பிரிவில் 92,371.15 கோடி ரூபாயாக உள்ளது.
பண மேலாண்மை மசோதா, ஆர்பிஐ
ஜூலை-செப்டம்பர் 2022 இல், மத்திய அரசு பண மேலாண்மை மசோதாக்கள் மூலம் எந்தத் தொகையையும் திரட்டவில்லை. இதேபோல் ரிசர்வ் வங்கியும் இக்காலாண்டில் அரசு பத்திரங்களுக்கான திறந்த சந்தை விற்பனைகளை மேற்கொள்ளவில்லை.
வணிக வங்கிகள்
மத்திய அரசுப் பத்திரங்களின் உரிமை முறையில், வணிக வங்கிகளின் பங்கு ஜூன் 30 அன்று 38.04 சதவீதத்தில் இருந்து 2022 செப்டம்பர் இறுதியில் 38.3 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அந்நியச் செலாவணி
அந்நியச் செலாவணி கையிருப்பைப் பொறுத்தவரை, செப்டம்பர் 30, 2022 இல் 532.66 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, செப்டம்பர் 24, 2021 அன்று 638.64 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்தது.
ரூபாய் மதிப்பு
ஜூலை 1, 2022 மற்றும் செப்டம்பர் 30, 2022 இடையே, ரூபாயின் மதிப்பு 3.11 சதவீதம் குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஜூலை 1-ம் தேதி 79.09 ஆக இருந்தது, செப்டம்பர் 30-ம் தேதி 81.55 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications