சென்னை: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இந்திய அரசாங்கம் கொண்டைக் கடலை இறக்குமதிக்கு 66 சதவீத இறக்குமதி வரியை விதித்தது. ஆனால் தற்போது கொண்டைக்கடலையின் உற்பத்தி குறைந்துள்ளதால், 2025ஆம் நிதியாண்டு வரை இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளது.
இறக்குமதி வரி (Import Duty) என்றால் என்ன?: பெரும்பாலும் இந்த இறக்குமதி வரியை அனைத்து நாடுகளும் அமல்படுத்தியுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் தங்களுக்கு தேவையான பொருட்கள், அந்தந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் ஒரே நாட்டில் அனைத்து பொருட்களும் உற்பத்தி செய்யப்படுவது சற்று கடினம் தான். எனவே ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை இன்னொரு நாட்டில் இறக்குமதி செய்து கொள்கின்றனர். இதுபோல் ஒரு நாட்டின் தயாரிப்புகளை, இன்னொரு நாட்டில் பெற வேண்டும் என்றால், அவர்கள் இறக்குமதி வரியை செலுத்த வேண்டும்.

நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்காமல் பிற நாடுகளில் இருந்து பொருட்களை வாங்கும் போது, ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் அதற்காக பிற நாடுகளைப் பகைத்துக் கொள்ளவும் முடியாது. இது போன்ற காரணங்களால் இறக்குமதி வரியை அரசு விதிக்கின்றது.
கொண்டைக்கடலையின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக அரசு 66% இறக்குமதி வரியை விதித்திருந்தது. ஆனால் தற்போது அந்த வரியை நீக்கியுள்ளது. அதேபோல் பட்டாணிக்கும் வரியில்லா இறக்குமதியை ,இரண்டாவது முறையாக, அக்டோபர் 31 வரை, அரசாங்கம் நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், இதே போல் சில பருப்பு வகைகளுக்கு வரியில்லா இறக்குமதியை அரசாங்கம் அனுமதித்தது.
2023 முதல் 2024 ஆம் ஆண்டுக்கான மொத்த கொண்டைக்கடலை உற்பத்தி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 12.1 மில்லியன் டன்னாகக் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2022 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மொத்த கொண்டைக்கடலை உற்பத்தி 12.2 மில்லியன் டன்களாக இருந்தது.
முக்கிய பருப்பு வகைகளின் உற்பத்தி மதிப்பிடப்பட்டதை விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசாங்கம் இறக்குமதி வரியை நீக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நாட்டின் உற்பத்தியில் ஏறக்குறைய பாதியை உள்ளடக்கிய ஒரு முக்கியமான பருப்பு வகையான கொண்டைக்கடலையின் சந்தை விலை தற்போது குவிண்டாலுக்கு ரூ.6,000 முதல் ரூ.6,100 வரை உள்ளது. இது 2024ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ. 5,440ஐ தாண்டியுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP): MSP என்பது விவசாய பொருட்களை விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் கொள்முதல் செய்யும் விலையே குறைந்தபட்ச ஆதரவு விலை எனக் கூறப்படுகிறது. தற்போது இந்த கொண்டைக்கடலையின் MSP விலை குவிண்டாலுக்கு ரூ.6,000ஐ தண்டியுள்ளதால், அரசாங்கம் இறக்குமதி வரியை நிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநில அரசுகள் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க கொண்டைக்கடலையின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணாமாக இம்போர்ட் வரி நீக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications