கூகுள்-ன் AI சாட்பாட் தளமான ஜெமினி-யில் பிரதமர் மோடியைப் பற்றிய ஒரு கேள்வி பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. AI தான் எதிர்காலம் என கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு ஏஐ தளங்களுக்கு கடிவாளம் போட்டு அதன் போக்கை அடக்கியுள்ளது. ராஷ்மிகா மந்தனா சம்பவத்தில் துவங்கி மோடி பாசிசவாதியா என்ற கேள்வி வரையில் ஏஐ பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
மத்திய அரசு நம்பகத்தன்மை இல்லாத செயற்கை நுண்ணறிவு கருவிகளின் வெளியீட்டிற்கு இனி அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இந்த அறிவிப்பில், “நம்பகத்தன்மை இல்லாத அல்லது பரிசோதனையில் உள்ள செயற்கை நுண்ணறிவு கருவிகளை வெளியிடுவதற்கு முன்பு, தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
Generative AI கருவிகள் உட்பட அனைத்து ஏஐ கருவிகளும் இந்திய இணையத்தில் பயனர்களுக்குக் கிடைப்பது இந்திய அரசின் தெளிவான அனுமதியுடன் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்க, உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இதேவேளையில் சமூக ஊடக நிறுவனங்களுக்கான விதிமுறைகளை இந்தியா கடுமையாக்கி வருகிறது.

இவ்விரு தரப்பு நிறுவனங்களுக்கும் தெற்காசிய நாடுகள் முதன்மையான சந்தையாக உள்ளது. இந்த வேளையில் மத்திய அரசின் நடவடிக்கை ஏஐ நிறுவனங்களையும் அதன் எதிர்காலத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
இந்தியாவின் வெள்ளிக்கிழமை அறிவிப்பானது, தங்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகள் "தேர்தல் நடைமுறையின் நேர்மையை" பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய தளங்களுக்கு அறிவுறுத்துகிறது. இந்தியாவில் இந்த கோடை காலத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது, இதில் ஆளும் இந்து தேசிய கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications