இந்தியாவில் சாட்டிலைட் வாயிலாக பிராட்பேன்ட் சேவையை வழங்க பல வருடமாக மத்திய அரசிடம் அனுமதி கேட்டு நிற்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
இந்திய அரசு, சாட்டிலைட் இணையச் சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் அல்லாமல் நிர்வாக ரீதியாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டெலிகாம் சேவைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது போலத் தான் சாட்டிலைட் வாயிலாக பிராட்பேன்ட் சேவைக்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வாதம் எழுந்தது. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்த ஸ்டார்லிங்க் தோல்வியுடன் திரும்பியது.
இந்தியாவின் மிகப்பெரிய ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானியும், ஏர்டெலின் தலைவர் சுனில் மிட்டலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இது மத்திய டெலிகாம் துறைக்கும் TRAI அமைப்பிற்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இதில் ஆய்வுகளை மேற்கொண்டதால் இதுவரையில் ஜியோ, ஏர்டெல், ஸ்டார்லிங்க் ஆகியவை தனது சாட்டிலைட் பிராண்ட்பேன்ட் சேவையை வழங்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் சர்வதேச நடைமுறைகளுக்கு இணங்க இந்தியாவிலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் அல்லாமல் நிர்வாக ரீதியாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம் இந்தியாவில் உடனடியாக ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகப்படுத்த முடியும். ஆனால் இந்த முடிவு செயற்கைக்கோள் வாயிலாக பிராட்பேன்ட் சேவை வழங்க முயற்சி செய்யும் ஜியோவுக்கும், ஏர்டெல்-க்கும் பெரும் தோல்வியாக அமையலாம். இந்த சேவைக்காக ஜியோ மற்றும் ஏர்டெல் பெரும் முதலீட்டையும், கூட்டணியும் அமைத்துள்ளது.
இதேபோல் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஸ்பெக்ட்ரத்தை கட்டாயம் இலவசமாக வழங்கிடாது, கட்டாயம் கட்டண அடிப்படையில் தான் வழங்கும், இதற்கான விலையை டிராய் நிர்ணயிக்கும். இந்த முடிவுகள் அனைத்தும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) கொள்கைகளுக்கு இணையாக உள்ளது.
இதுகுறித்து எலான் மஸ்க் தனது டிவிட்டரில் டிவீட்-ம் செய்துள்ளார். இந்தியாவில் எலான் தனது வர்த்தகத்தைப் பல முறை கொண்டு வர முயற்சி செய்து தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் வேளையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்-ன் வெற்றிக்கு பின்பு இந்திய அரசு மேற்கொண்ட முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications