இந்திய அரசு, 2025ஆம் ஆண்டுக்குள் நம்நாட்டில் கடைப்பிடிக்கும் அடிப்படை ஊதியத்தை (minimum wage) வாழ்வதற்கான ஊதியமாக (living wage) மாற்றும் திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது. இதற்காகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation) உடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
வாழ்வதற்கான ஊதியம் என்பது, தொழிலாளர் தனது அடிப்படைத் தேவைகளை (வீடு, உணவு, மருத்துவம், கல்வி, உடை) பூர்த்தி செய்ய தேவையான குறைந்தபட்ச வருமானமாகும். இந்த living wage முறை சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்த மாதம் ஆரம்பத்தில் அங்கீகரித்தது. இது அடிப்படை ஊதியத்தை விட அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஒரு வருடத்திற்குள் அடிப்படை ஊதியத்தைக் கைவிட்டு living wage முறைக்குக் கடந்து செல்ல முடியும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜெனீவாவில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி நடைபெற்ற 350வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த சீர்திருத்தம் குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 90% பேர் வகைப்படுத்தாத துறையில் பணிபுரிபவர்கள், இவர்களில் பலர் தாங்கள் பணிபுரியும் மாநிலத்தைப் பொறுத்து ரூ.176 அல்லது அதற்கும் அதிகமான ஒரு நாள் ஊதியத்தைப் பெறுகின்றனர்.
இருப்பினும், 2017ஆம் ஆண்டு முதல் இந்த தேசிய குறைந்தபட்ச ஊதிய தொகை திருத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக சில மாநிலங்கள் 176 ரூபாய் அளவை விடக் குறைவாகவே ஊதியம் வழங்குகின்றன.
சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (ILO) இந்தியா 1922 முதல் முக்கிய அங்கமாக உள்ளது. இதேபோல் அதன் நிர்வாக குழுவில் நிரந்தர உறுப்பினராகவும் உள்ளது. living wage கொண்டு வரப்பட்டால் மக்களின் வருமானம் அதிகரித்தும், நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அடிப்படை ஊதியத்திற்குப் பதிலாக, வாழ்வதற்கான ஊதியத்தை (living wage) அமல்படுத்துவது, கோடிக்கணக்கான மக்களை வறுமைக்கோட்டிலிருந்து வெளியேற்றுவதற்கும், அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் வழிவகுக்கும் என்று அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications