இந்தியாவில் நிதி நெருக்கடி அதிகரிப்பு.. செலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு..!

இந்தியாவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பாதிப்பால் மத்திய அரசுக்குப் பல வருமானங்கள் குறைந்துள்ளது. குறிப்பாக ஜிஎஸ்டி வருமானம் அதிகளவில் குறைந்துள்ள காரணத்தினால் ஜிஎஸ்டி வரியில் இருந்து மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய பகுதியைக் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் நாட்டின் பட்ஜெட்-ல் பெரிய அளவிலான நிதி நெருக்கடி வரும் எனக் கணித்து முன்கூட்டியே மத்திய அரசு பல துறைக்கான செலவுகளைக் குறைத்துள்ளது. அதிலும் முக்கியமாகப் பொருளாதார வளர்ச்சி அதிகம் பங்கு வகிக்கும் துறைக்கான செலவுகளையும் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் பல கோடி ரூபாய் அளவிலான நிதியைச் சேமிக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

செலவுகள்

செலவுகள்

மத்திய அரசு சொத்துக்களான சாலை, தொழிற்சாலை போன்றவற்றை உருவாக்கவும், பாதுகாக்கவும், மேம்பாட்டுக்காகச் செலவிடப்படும் தொகையை மத்திய அரசு கடந்த 6 மாதத்தில் 15 சதவீதம் குறைந்துள்ளது.

மூலதன செலவுகள்

மூலதன செலவுகள்

ஆம் Capital expenditure-க்காகப் பட்ஜெட்-ல் ஒதுக்கப்பட்ட நிதியில் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலகட்டத்தில் 40 சதவீதம் வரை மட்டுமே செலவிட்டுள்ளது மத்திய அரசு. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்-ல் 55.5 சதவீதமாக உள்ளது.

21 லட்சம் கோடி ரூபாய்

21 லட்சம் கோடி ரூபாய்

கொரோனா காரணமாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசின் 21 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் பெரும் பகுதி ஏழை மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

முக்கியத் துறை

முக்கியத் துறை

இதே காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் துறைகளான நிலக்கரி, மின்சாரம், கப்பல் போக்குவரத்து, ஸ்டீல் ஆகிய துறைகளுக்கு வருடாந்திர பட்ஜெட் அறிக்கையில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையைத்தான் பெற்றுள்ளது.

தவிர்க்கக் கூடாது

தவிர்க்கக் கூடாது

மத்திய அரசு Capital expenditure தொகையைச் செலவிடுவதை எந்தக் காரணத்திற்காகவும் தவிர்க்க கூடாது. இதை நிறுத்தினால் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தேசிய பொது நிதியியல் மற்றும் கொள்கையில் அமைப்பில் இருக்கும் ரிசர்வ் வங்கி இருக்கையின் பேராசிரியர் Sabyasachi Kar தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

மத்திய அரசு Capital expenditure தொகையைச் செலவிடுவதைக் குறைத்தால் நாட்டின் வருமானம் பாதிப்பது மட்டும் அல்லாமல் பல இடங்களில் செலுத்த வேண்டி வட்டி தொகையும் தேக்கம் அடையும், இதனால் பல லட்சம் ஊழியர்களின் சம்பளமும் வேலையும் பாதிக்கப்பட்டும்.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

இதேபோல் மத்திய அரசு செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்களுக்குச் செலவிடப்படும் தொகையைக் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து குறைத்துப் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியைச் சேமித்து வருகின்றனர்.

Capital expenditure தொகையைச் செலவு செய்வதை மத்திய அரசு குறைத்தால் பல துறைகளின் வருவாய் மற்றும் வர்த்தகம் பாதிக்கும் என்பது தான் கவனிக்க வேண்டியது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+