பாகிஸ்தான் ஷாக்.. இந்தியா-வின் சைலண்ட் ஆப்ரேஷன்..!

இமயமலைப் பகுதியில் உள்ள சலால் (Salal) மற்றும் பாக்லிஹார் (Baglihar) நீர்மின் திட்டங்களின் நீர்த்தேக்க திறனை அதிகரிக்கும் பணிகளைத் இந்திய அரசு பாகிஸ்தானிடம் எவ்விதமான முன் அறிவிப்புமின்றி தொடங்கியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பின்பு இந்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

1960-ல் உருவாக்கப்பட்ட சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய பின்னர், இந்திய அரசு 2 அணைகளில் தேங்கியுள்ள அடிமட்ட மண்ணை சுத்தம் செய்யும் பொருட்டு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. இதன் மூலம் தண்ணீர் சேமிப்பு அதிகரிக்க முடியும், அதேபோல் மின்சார உற்பத்தியில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க முடியும். இந்த புகைப்படம் இந்தியா டூடே பகிர்ந்தது.

பாகிஸ்தான் ஷாக்.. இந்தியா-வின் சைலண்ட் ஆப்ரேஷன்..!

மே 1 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற நீர்த்தேக்க சுத்திகரிப்பு (flushing) செயல்பாட்டின்போது, செனாப் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள், சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டதைக் கவனித்துள்ளனர். இந்தப் பணிகள் பாகிஸ்தானுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், இதேபோன்ற முயற்சிகள் பிற அணைகளில் மேற்கொள்ளப்பட்டால் பாகிஸ்தான் நாட்டின் நீர்வளத்தைப் பாதிக்கலாம்.

காஷ்மீர் தாக்குதலுக்கு பின்பு பாகிஸ்தானின் 80% விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரம் வழங்கும் சிந்து நதி ஒப்பந்தத்தை கடந்த மாதம் இந்தியா நிறுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. செனாப் ஆறு உள்ளிட்ட மேற்கு ஆறுகளின் நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்தியாவுக்கு அவற்றில் நீர்மின் திட்டங்களை அமைக்கும் உரிமை உள்ளது.

சலால் (690 மெகாவாட்) மற்றும் பாக்லிஹார் (900 மெகாவாட்) அணைகளில் மே 1 முதல் மே 3 வரை மூன்று நாட்களுக்கு நீர்த்தேக்க சுத்திகரிப்பு செயல்பாடு நடைபெற்றது. இந்தப் பணிகளை, இந்திய அரசுக்கு சொந்தமான NHPC லிமிடெட் மற்றும் ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன. இந்த புகைப்படம் இந்தியா டூடே பகிர்ந்தது.

பாகிஸ்தான் ஷாக்.. இந்தியா-வின் சைலண்ட் ஆப்ரேஷன்..!

இந்த சலால் அணை 1987 ஆண்டிலும், பாக்லிஹார் அணை 2008/09-ல் கட்டப்பட்ட பின்னர், இதுவரை ஒரு முறை கூட இந்திய அரசு அடி மண்ணை சுத்திகரிப்பு செய்தது இல்லை, இதுவே முதல் முறை. அதுவும் சிந்து நதி நீர் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலும், பாகிஸ்தான் உடன் போர் செய்ய தயாராக இருக்கும் நிலையிலும் நடத்தப்பட்டு உள்ளது. ஏனெனில் சிந்து நதி ஒப்பந்தம் இத்தகைய சுத்திகரிப்பு பணிகளுக்கு அனுமதிக்காது என்பதால் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட வேளையில் இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அணையில் படிந்திருக்கும் புல், மணல் மற்றும் பிற பொருட்களை அகற்றுவதற்காக நீரை வெளியேற்றும் இந்த செயல்முறை, அணையின் மின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதோடு, டர்பைன்களுக்கு ஏற்படும் சேதத்தையும் தடுக்கிறது. இதன் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளின்படி, கீழ்நிலை நாடுகளுக்கு வெள்ள அபாயம் ஏற்படுத்தக்கூடிய நீர் வெளியேற்றங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்தியா அவ்வாறு செய்யப்படவில்லை. செனாப் ஆற்றங்கரையில் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள், வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரு அணைகளில் இருந்தும் நீர் வெளியேற்றப்பட்டதைக் கவனித்ததாகக் ரெயூட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

பாக்லிஹார் அணையின் நீண்டகால சர்ச்சை

பாக்லிஹார் அணை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்டகால சர்ச்சையாக இருந்து வருகிறது. இந்த அணையின் வடிவமைப்பு, சிந்து நதி ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறி, பாகிஸ்தான் உலக வங்கியின் உதவியை நாடி இப்பிரச்சனைக்கு தீர்வு காண அழைத்தது. ஆனால் இதுவரையில் இதற்கு தீர்வு காணப்படவில்லை.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவால் செனாப் ஆற்றின் ஓடையின் மீது மட்டுமே (run-of-the-river) நீர்மின் திட்டங்களை அமைக்க முடியும், மேலும் நீர்த்தேக்க திறன் மற்றும் நீர் ஓட்டக் கட்டுப்பாடு ஆகியவை குறைவாக இருக்க வேண்டும். பாகிஸ்தான், இந்த அணையின் வடிவமைப்பு, இந்தியாவுக்கு நீர் ஓட்டத்தைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்தும் திறனை அளிப்பதாக கூறி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+