கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழையும் முன்பே இந்திய பொருளாதாரம் மோசமான மந்த நிலை காரணமாக சரிந்து வந்தது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக கொரோனாவும் வந்தது.
Recommended Video
இப்போது இந்தியா இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு எனில் இந்தியாவின் வளர்ச்சி பூஜ்ஜியத்தினை எட்டும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இப்படி நாடே கொரோனாவினால் அல்லோல் பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், அரசின் வருவாயும் முற்றிலும் முடங்கி போயுள்ளது. இதன் காரணமாக அரசு மீண்டும் ரிசர்வ் வங்கியினை நிதிக்காக எதிர்பார்க்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
ஆர்பிஐ-யின் உதவியை நாடலாம்
இதுகுறித்து வெளியான எக்னாமிக் டைம்ஸ் செய்தியில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வரும் இதே நேரத்தில் அரசின் கையில் நிதி இல்லாமல் போகலாம். இதன் அரசு மீண்டும் ரிசர்வ் வங்கியின் கதவை தட்ட நேரிடலாம் நாட்டில் தொடர்ந்து வைரஸின் தாக்கம் பரவுவதால், பொருளாதாரம் நிச்சயம் முடங்கலாம். ஆக இதனை ஈடு செய்வதற்காக அரசு மத்திய ரிசர்வ் வங்கியினை நாடலாம்.
பட்ஜெட் பற்றாக்குறை
சில மதிப்பீடுகளின் படி, மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தியில் மொத்தம் 7 சதவீதம் அளவுக்கு அதிகமான பட்ஜெட் பற்றாக்குறையை அரசாங்கம் எதிர்கொள்கிறது. இது இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பரந்த அளவில் உள்ளது. இதனால் நிர்வாகம் இறையாண்மை பத்திரங்களை வாங்க அல்லது ஈவுத்தொகையை அதிகரிக்க நிர்வாகம் ஊக்குவிக்கலாம்.
செலவு செய்ய வேண்டும்
இதே மற்றொரு அறிக்கையில் தேவையினை ஊக்குவிக்க அரசு செலவு செய்தால் மட்டுமே, தேவையை உருவாக்க முடியும். ஆக அரசு செலவு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பானின் மத்திய வங்கிகள் இந்த கொரோனா சமயத்தில் நிதி ஊக்குவிப்பினை அளித்து வருகின்றன.
என்ன சொல்கிறது சட்டம்
இந்தியாவின் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம், ரிசர்வ் வங்கியினை முதன்மை சந்தையில் நேரடியாக அரசாங்கத்திடம் இருந்து பத்திரங்களை வாங்குவதை தடுக்கிறது. ஆனாலும் நாடு ஒரு தேசிய பேரிடர் அல்லது கடுமையான மந்த நிலையை எதிர்கொண்டால் தப்பிக்கும் விதிமுறையை சட்டம் வழங்குகிறது.
கடனை எப்படி நிர்வகிப்பது?
ரிசர்வ் வங்கி இதுவரை இரண்டாம் நிலை சந்தையில் சில விவேகமான பத்திர கொள்முதல் செய்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் மார்ச் வரையிலான நிர்வாகத்தின் 12 டிரில்லியன் ரூபாய் கடன்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த திட்டத்தை அரசு கோடிட்டு காட்டவில்லை.
நிதி பற்றாக்குறை இலக்கு
நடப்பு நிதியாண்டில் நிதிபற்றாக்குறையானது மொத்த ஜிடிபி விகிதத்தில் 7 சதவீதமாக இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது கடைசியாக 1994ம் ஆண்டில் இப்படி காணப்பட்டது. இது 3.5 சதவீத இலக்குக்கு எதிராக இருந்தது.


Click it and Unblock the Notifications