விமான டிக்கெட் புக் செய்துவிட்டு, கடைசி நிமிடத்தில் கேன்சல் செய்யும் நிலையில் பணத்தை திரும்ப பெற விமான நிறுவனங்களிடம் போராடிய அனுபவம் பலருக்கும் இருக்கும். இனி இதுப்போன்ற சங்டமான நிலை யாருக்கும் வராது. மத்திய அரசு அதிகாரிகளும், விமான நிறுவனங்களும் புதிய திட்டத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்தியாவில் விமான பயணிகளுக்கு பெரிய நிவாரணமாக அமையும் புதிய செயல்முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. விமானம் புறப்படும் சில மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட்டை ரத்து செய்தாலும், டிக்கெட் விலையில் 80 சதவீதம் வரை திரும்ப பெறும் வசதியை கொண்டு வர உள்ளது.

மத்திய விமானத் துறை இந்த மாற்றத்தை அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது பயணிகளின் புகார்களை குறைத்து, விமான நிறுவனங்களின் கஸ்டமர் சேவை தரத்தையும், விமான சேவை தரத்தையும் உயர்த்தும். அதேவேளையில் விமான நிறுவனங்களுக்கு எவ்விதமான நஷ்டமும் இல்லாத வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக பேச்சு வார்த்தை துவங்கியுள்ளது.
இந்தியாவில் விமான போக்குவரத்து சேவையை பெரிய அளவில் மேம்படுத்த திட்டமிட்டு வரும் வேளையில், வாடிக்கையாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் அனைத்து தரப்பினரும் இறங்கியுள்ளனர். அடுத்த 5-10 வருடத்தில் இந்திய விமான போக்குவரத்து துறை நாட்டின் முக்கிய போக்குவரத்தாக மாற உள்ளது.
தற்போதைய விதிகள் என்ன சொல்கின்றன?
தற்போது விமானம் புறப்படும் மூன்று மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால், அது "நோ-ஷோ" என்று கருதப்பட்டு முழு டிக்கெட் தொகையையும் இழக்க வேண்டியிருக்கும். இதேவேளையில் விமான பயணியின் மருத்துவ நிலை போன்ற காரணங்களுக்கு உரிய ஆவணம் சமர்ப்பித்தால் விமான நிறுவனங்கள் முழு தொகையை திரும்ப வழங்குவதுண்டு. ஆனால் இது முற்றிலும் அந்தந்த நிறுவனங்களின் சொந்த முடிவு.
புதிய முறை எப்படி வேலை செய்யும்?
இந்த கட்டமைப்பில் விமானத் துறை செயலர் உள்நாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் படி, ஒவ்வொரு டிக்கெட்டிலும் சிறிய காப்பீட்டு அம்சத்தை தானாக சேர்க்கும் ஒரு ஏற்பாட்டை வடிவமைக்கிறார். இதற்காக விமான பயணிகள் எந்த கூடுதல் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. விமான நிறுவனங்கள் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, பிரீமியம் தொகையை தாங்களே ஏற்கும்.
இதுக்குறித்து நாட்டின் முன்னணி விமான நிறுவன அதிகாரி கூறுகையில், "குறைந்த விலை வகையில் காப்பீட்டு அம்சத்தை சேர்த்து, பயணிகளுக்கு டிக்கெட் ரத்துக்கான தொகையை திரும்ப செலுத்த முடியுமா என்பதை ஆராய்ந்து வருகிறோம்" என்று டைம்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்?
ஒவ்வொரு டிக்கெட்டிலும் சுமார் 50 ரூபாயை பிரீமியம் கணக்கில் எடுத்தால், விமானம் புறப்படும் நான்கு மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் பயணிகள் 80 சதவீதம் வரை திரும்பந் தொகை பெறலாம். இதனால் தற்போதைய முறையில் இருக்கும் முழு இழப்பை தவிர்க்க முடியும்.
இதேவேளையில் தற்போது பல ஆன்லைன் டிராவல் போர்டல்கள் ஏற்கெனவே டிக்கெட் புக் செய்யும் போது தனி காப்பீடு வாங்க சொல்லி வருகின்றன. இதே முறையை தான் இப்புதிய முறை தானாக டிக்கெட்டில் சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.
பயணிகளுக்கு என்ன நன்மை?
இந்த மாற்றம் பயணிகளுக்கு பெரிய நிம்மதியைத் தரும். திடீர் திட்ட மாற்றம், குடும்ப அவசரங்கள், வானிலை பிரச்சினைகள் போன்றவற்றால் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்போது முழு தொகையை இழக்காமல், குறைந்தபட்சம் 80 சதவீதத்தை குறைந்தபட்சம் பெறலாம்.
இது குறிப்பாக அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கும், குடும்பங்களுக்கும் உதவியாக இருக்கும். விமான நிறுவனங்களும் இதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தியை உயர்த்தி, நீண்ட காலத்தில் பயணிகளை ஈர்க்க முடியும்.
விமான நிறுவனங்களுக்கு சவாலா?
விமான நிறுவனங்கள் காப்பீட்டு பிரீமியத்தை தாங்களே ஏற்க வேண்டும் என்பதால், இத்திட்டம் அறிமுகம் செய்யும் போது தொடக்க செலவு சற்று அதிகரிக்கலாம். ஆனால் இது பயணிகளின் நம்பிக்கையை அதிகரித்து, டிக்கெட் விற்பனையை உயர்த்தும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications