அன்னிய முதலீடுகளுக்கு 26% வரை அனுமதிக்க ஆலோசனை.. சீனாவுக்கு லாபம்..!

இந்தியாவின் அன்னிய முதலீடு கட்டுப்பாடுகள் அதிகளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு அதிகப்படியாக அன்னிய முதலீடுகளின் தேவை இருக்கும் காரணத்தால் இந்தியாவுடன் எல்லைகளைப் பகிரிந்துக்கொள்ளும் அண்டை நாடுகள் 26 சதவீதம் வரையில் முதலீடு செய்ய அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

ஏப்ரல் மாதம் இந்தியச் சந்தையில் சீனா மற்றும் சீன நிறுவனங்களின் முதலீடுகளுக்குத் தடை அறிவிக்கப்பட்ட நிலையில் 100க்கும் அதிகமான முதலீட்டு விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது.

அன்னிய முதலீடு அளவுகள் குறித்து மத்திய அரசு பல வாரங்களாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில், தற்போது நடக்கும் இந்த முக்கியக் கூட்டத்தில் முதலீட்டின் அளவுகள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன முதலீடுகள்

சீன முதலீடுகள்

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு சீன முதலீடுகள் அனைத்தையும் அரசு ஆய்வு செய்த பின்பு தான் ஒப்புதல் அளிக்கப்படும் என அறிவித்தது, அதன் பின்பு "non-controversial" முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

26 சதவீதம்

26 சதவீதம்

தற்போது சுமார் 26 சதவீதம் வரையிலான அன்னிய முதலீடுகளுக்குச் சில துறையில் மட்டும் அனுமதி அளிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் Promotion of Industry and Internal Trade (DPIIT) அமைப்பின் செயலாளர் ஆகியோர் முதலீடு அளவு குறித்து ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளது.

27 பில்லியன் டாலர்

27 பில்லியன் டாலர்

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சீன முதலீட்டு நிறுவனங்கள் 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 27 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளனர்.

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் சீன முதலீடுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்றால் யாரும் மறுக்க முடியாது.

அலிபாபா மற்றும் டென்சென்ட்

அலிபாபா மற்றும் டென்சென்ட்

இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களான பேடிஎம், சோமேட்டோ, பிக்பேஸ்கட், ஹைக், பிளிப்கார்ட், எம்எக்ஸ் பிளேயர், பைஜூஸ் என இன்னும் பல நிறுவனங்களில், சீனாவின் முன்னணி டிஜிட்டல் மற்றும் ஈகாமர்ஸ் சேவை நிறுவனங்களான அலிபாபா மற்றும் டென்சென்ட் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

இந்தியா - சீன

இந்தியா - சீன

இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட ராணுவ தாக்குதலின் எதிரொலியாகவே மத்திய அரசு இந்தியச் சந்தையில் சீன முதலீடுகளுக்குத் தடை விதித்தது.

சீனாவின் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களும் விண்ணப்பங்களும் இந்தத் தடையால் தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 சீனாவுக்கு லாபம்

சீனாவுக்கு லாபம்

இந்தியா - சீன இடையிலான பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை அடைந்து வரும் நிலையில் மத்திய அரசு அண்டை நாடுகளின் அன்னிய முதலீடு குறித்தும் ஆலோசனைச் செய்து வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மூலம் முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டால் கிடப்பில் இருக்கும் 100க்கும் அதிகமான சீன முதலீடுகள் விண்ணப்பங்கள் ஒப்புதல் அடைய வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+