உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ள இந்தியா, தற்போது ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்திய அரசாங்கம், பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும், தனியார் துறை சுத்திகரிப்பு நிறுவனமான ரியலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்கும் (RIL) ஒரு அரிய வேண்டுகோளை விடுத்துள்ளது. ரஷ்யாவுடன் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றை கூட்டாக நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அனைத்து தரப்பினரையும் அழைத்தும்.

இதற்கு முன்னதாக, இந்திய அரசுடைமை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டுமே ரஷ்யாவுடன் நீண்ட கால ஒப்பந்தம் கொண்டிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தம் கடந்த மார்ச் மாத இறுதியில் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை.
இந்த நிலையில் மாறிவரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் இருந்து இந்தியாவின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்-யில்குறைந்தது மூன்றில் ஒரு பகுதியை, நிலையான தள்ளுபடியில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரகசியமாக நடந்து வருவதால் முழு விபரம் வெளியாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல் படி, இந்த கூட்டு பேச்சுவார்த்தை கோரிக்கை, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லாமல், வெறும் வாய்மொழி வேண்டுகோள் ஆக மட்டுமே உள்ளது என்றும் கூறுகின்றனர்.
ஏப்ரல் மாதம், இந்தியா ரஷ்யாவில் இருந்து ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட 8.2% அதிகமாகும். இதன் மூலம், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 32 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஒன்பது மாதங்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியின் உச்சபட்சமாகும்.
ரஷ்யாவின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான சோவ் கொம்ஃப்ளோட் (Sovcomflot) இன் தடைசெய்யப்படாத கப்பல்கள் மீண்டும் இயக்கப்பட ஆரம்பித்ததே இந்த 9 மாத உயர்வுக்கு முக்கிய காரணமாகும். கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்கா சோவ் கொம்ஃப்ளோட் நிறுவனத்தையும் அதன் 14 கப்பல்களையும் மேற்கத்திய தடைகளை மீறியதாகக் குறிப்பிட்டு தடை செய்தது.
இதன் விளைவாக, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்காலிகமாக சோவ் கொம்ஃப்ளோட் கப்பல்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி வைத்தன. தற்போது தடை செய்யப்படாத கப்பல்கள் மீண்டும் இயக்கப்படுவதால், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இந்தியா மொத்தம் 4.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஒரு நாளைக்கு இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட 6.5% குறைவாக இருந்தாலும், ஏப்ரல் 2023 ஐ விட சற்று அதிகமாகும்.
தற்போதைய நிலையில், ரஷ்யா இந்தியாவின் முதன்மையான கச்சா எண்ணெய் சப்ளையராக உள்ளது, ரஷ்யாவை தொடர்ந்து ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications