இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த நாளில் முடிக்க முடியாமல் காலதாமதமாகி வருகிறது, நான்கில் ஒரு திட்டம் கணிக்கப்பட்ட பட்ஜெட் தொகையைக் காட்டிலும் அதிகத் தொகை செலவாகிறது.
இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிப்பது மட்டும் அல்லாமல் சீன நிறுவனங்களை அதிகளவில் ஈர்ப்பதோடு உலகின் வர்த்தக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கப் பணிகளை எளிதாக்க மத்திய அரசு உருவாக்கியுள்ள ரூ.100 லட்சம் கோடி திட்டம் பெரிய அளவில் பலன் அளிக்க உள்ளது.
மோடி அரசு
மோடி அரசு 16 அமைச்சகங்களை டிஜிட்டல் தளத்தின் மூலம் இணைக்கும் 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான PM Gati Shakti திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது. இந்த PM Gati Shakti திட்டத்தின் டிஜிட்டல் போர்டலில் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்குமான டைசன், ஒப்புதல், மதிப்பீடுகள் ஆகிய அனைத்தையும் இந்த 16 அமைச்சகங்கள் செய்யலாம்.
Gati Shakti திட்டம்
Gati Shakti திட்டம் அடிப்படையே வேகமாக அதே நேரத்தில் செலவுகள் அதிகம் ஈர்க்காத நடைமுறையைப் புதிய நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான். இத்தகையைத் திட்டங்கள் புதிதாக வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும்.
சீனா
இந்த வேகமான நடைமுறை, ஒப்புதல் ஆகியவை சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கும், சீனா பிளஸ் ஓன் என்ற கொள்கையை ஏற்று உள்ள உலக நாடுகளுக்கும் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் புதிய நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதையும் வேகப்படுத்தியுள்ளது.
திறன்வாய்ந்த ஊழியர்கள்
அனைத்தையும் தாண்டி இந்தியாவில் திறன் வாய்ந்த ஊழியர்கள் அதிகம் இருக்கும் காரணத்தால் அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்தியாவுக்கு வருவதில் அதிகப்படியான லாபமும் உள்ளது.
1300 திட்டங்கள்
Gati Shakti தளத்தில் தற்போது 1300 திட்டங்கள் உள்ளது, இதில் 40 சதவீத திட்டங்கள் நில கையகப்படுத்துதல், காடு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு ஒப்புதல்கள் ஆகியவற்றின் மூலம் அதிகச் செலவுகளை ஈர்க்கிறது. இதை வேகப்படுத்தவும், இதில் உள்ள பிரச்சனைகளைச் சரி செய்யும் பணிகளைத் தான் தற்போது மத்திய அரசு பார்த்து வருகிறது.
ஆப்பிள், சாம்சங்
சீனா-வில் இருந்து வெளியேறும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இதுப்போன்ற டிஜிட்டல் திட்டங்கள் பெரிய அளவில் பலன் அளிக்கும். சமீபத்தில் ஆப்பிள், சாம்சங் ஆகியவை சீனாவில் உற்பத்தியை குறைத்துவிட்டு இந்தியாவில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications