பலத்த அடி வாங்கிய இந்திய ஹோட்டல்கள்.. மார்ச் – ஜூன் காலத்தில் ரூ.8000 கோடி இழப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகளவில் கொரோனாவின் தாக்கத்தினால் பல துறைகளும் ஆட்டம் கண்டுள்ளன. இதற்கு ஹோட்டல் துறையும் விதிவிலக்கல்ல.

அந்த வகையில் ஹோட்டல்கள் நடப்பு நிதியாண்டின் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 8,000 கோடி ரூபாய் வருவாயினை இழந்துள்ளதாக எஸ்டிஆர் ஹார்வத் ஹெச்டிஎல் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதோடு தனிப்பட்ட இண்டிபென்டண்ட் ஹோட்டல்களை சேர்க்கும்போது இந்த நஷ்ட விகிதம் 180% - 200% அதிகரிக்கலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மோசமான ஆண்டு
 

மோசமான ஆண்டு

இந்த அறிக்கையானது தொழில்துறை கண்காணிப்பாளர் எஸ்டிஆருடன் பங்கேற்கும் ஹோட்டல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய ஹோட்டல்களுக்கு கடந்த தசாப்தத்தில் 2019ம் ஆண்டு சிறந்ததாக இருந்தது. ஆனால் 2020ம் ஆண்டானது மிக மோசமான ஆண்டாக உள்ளது. ஏனெனில் நடப்பு ஆண்டில் பாதிவரை (H1 2020) ஹோட்டல்களில் ஆக்கிரமிப்புகள் வெறும் 38.3% இருந்தது. இதே முந்தைய ஆண்டில் பாதிவரை 66.4% இருந்தது.

வருவாய் இழப்பு

வருவாய் இழப்பு

அதே போல நடப்பு ஆண்டின் பாதிவரை (H1 2020) ஒவ்வொரு அறைக்கும் வருவாய் இந்த ஆண்டு 2,200 ரூபாயாக இருந்தது. இதுவே முந்தைய ஆண்டின் பாதிவரை (H1 2019) ஆண்டிற்கும் 3,900 ரூபாயாகவும் இருந்தது.

இந்தியாவில் மார்ச் முதல் ஏப்ரல் 2019 வரையிலான காலத்தில் ஒரு நாளைக்கு 89,000 ரூம்கள் ஆக்கிரமிக்கபட்டன. இதே மே முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஒரு நாளைக்கு 85,000 - 88,000 ரூம்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. எனினும் கடந்த மார்ச் மாதத்தில் 41,000 ரூம்கள், ஏப்ரல் மாதத்தில் 12,000 ரூம்கள், மே மாதத்தில் 21,000 ரூம்கள் மட்டுமே ஆக்கிரமிக்கபட்டுள்ளன.

லாக்டவுன் தான் காரணம்

லாக்டவுன் தான் காரணம்

இது கொரோனா லாக்டவுன் காரணமாக பல ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இன்னும் பலர் கணிசமாக நடவடிக்கைகளை குறைத்துள்ளனர் என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

தற்போது நாட்டில் லாக்டவுன் பரவலாக தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதும் கூட மாறுபட்ட பயண நெறிமுறைகள் இருப்பதால் தற்போதும் கூட ஹோட்டல்கள் ஆக்கிரமிப்பு என்பது குறைவாகவே காணப்படுகின்றது.

உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனையும் பாதிப்பு
 

உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனையும் பாதிப்பு

எனினும் இது ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட பலவிதமான பயண தளர்வின் காரணமாக பயணங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக உணவு மற்றும் குளிர்பானங்கள் மற்றும் செயல்பாட்டு வருவாய் மார்ச் - ஜூன் காலாண்டில் 3,200 கோடி ரூபாய் இழப்பினை சந்தித்து இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் உணவு மற்றும் குளிர்பானங்கள் பேரழிவிற்கு உட்பட்டுள்ளன.

செலவினங்கள் குறைவு

செலவினங்கள் குறைவு

தற்போது கோடைகால திருமண சீசன் மறைந்து விட்டது. இதனால் திருமண நிகழ்விற்காக பயன்படுத்தப்படும் ஹால் மற்றும் செலவினங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அதோடு பொழுதுபோக்கிற்காக மக்கள் செலவழிப்பது இன்னும் அதிகரிக்கவில்லை. ஏனெனில் அரசு இன்னும் உணவகங்கள் மற்றும் பார்களை வழக்கம் போல அனுமதிக்கவில்லை.

எந்தெந்த நகரங்களில் பாதிப்பு?

எந்தெந்த நகரங்களில் பாதிப்பு?

இது நகரவாரியாக பார்க்கும் போது நடப்பு பாதியாண்டில் 6 பெரிய மெட்ரோ நகரங்களில் தேவை 50 - 55% குறைந்துள்ளது. குருகிராமில் தேவை 57%மும், புனேவில் 63%மும், அகமதாபாத்தில் 42% வீழ்ச்சியும், கோவா மற்றும் ராஜஸ்தானில் முறையே 83% மற்றும் 62%மும் தேவை குறைந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதிலும் நஷ்டம்

இதிலும் நஷ்டம்

எஸ்டிஆர் மற்றும் ஹார்வத் ஹெச்டிஎல் மதிப்பீடுகள், மார்ச் முதல் ஜூன் வரை luxury -upper upscale, upscale-upper midscale and midscale வகுப்புகளில் முறையே 2,700 கோடி ரூபாய் மற்றும் 1,500 கோடி ரூபாய், 600 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian hotels lost Rs.8,000 crore revenue between march –june

STR Horwath HTL report said Indian hotels lost Rs.8,000 crore revenue between march –june
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?