இந்தியாவில் தற்போது கடன்கள் மிக எளிமையாக கிடைக்கின்றன. சிறு கடன்கள் தொடங்கி பெரிய அளவிலான கடன்கள் வரை வங்கிகளும் ம் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு கடன்களை வழங்குகின்றன. இந்த காலத்தில் கடன் வாங்குவது என்பது மிக எளிமையான ஒன்றாக மாறிவிட்டது.
கடன் வாங்குவதற்கு நாம் வங்கிகளுக்கு கூட செல்ல வேண்டிய தேவை இல்லை. வீட்டில் இருந்தபடியே போனிலேயே ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் நம்முடைய அக்கவுண்டிற்கு கடன் பணம் வந்து விடுகிறது . அந்த அளவிற்கு கடன் வாங்குவது என்பது மிகவும் எளிமையானதாக மாறிவிட்டது. முந்தைய தலைமுறையினரை பொறுத்தவரை கடன் வாங்குவது என்றால் மிக அச்சப்படுவார்கள். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே கடன் வாங்க செல்வார்கள். ஆனால் இந்த தலைமுறை கடன் வாங்க அஞ்சுவதே கிடையாது.

இந்த கடன் வாங்கும் போக்கு இந்திய குடும்பங்கள் மீது எவ்வளவு பெரிய சுமையை ஏற்படுத்தியிருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. 2019ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் வரையிலான இந்த ஆறு ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்தமாக மக்களின் சொத்து சேர்க்கை என்பது 48% உயர்ந்திருக்கிறது. ஆனால் மக்களின் கடன் மதிப்பு 102 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதாவது மக்கள் மீது இருக்கக்கூடிய கடன் சுமை இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது.
2019 - 2020 ஆம் ஆண்டில் இந்தியர்களிடமிருந்த நிதி சார்ந்த சொத்துக்களின் மதிப்பு 24.1 லட்சம் கோடி ரூபாய், இதுவே 2024-2025 ஆம் ஆண்டில் 35.6 லட்சம் கோடி ரூபாய் என வளர்ச்சி கண்டிருக்கிறது. அதாவது 48% உயர்ந்திருக்கிறது. அதே வேளையில் 2019 - 2020 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு இருந்த கடன் சுமை 7.5 லட்சம் கோடி ரூபாய் , அது 2024- 2025 ஆம் ஆண்டில் 15.7 லட்சம் கோடி ரூபாய் என உயர்வு கண்டிருக்கிறது. அதாவது மக்களின் கடன் சுமை 102% அதிகரித்துள்ளது.

இந்தியர்கள் தங்களுடைய இஷ்டத்துக்கு கடன் வாங்குகிறார்கள் என்பது ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது. பொருளாதாரத்தின் ஒரு பங்காக பார்க்கும்போது வருடாந்திர நிதி சொத்து உருவாக்கம் என்பது 2019 -2020 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாக இருந்தது அது 2024 -2025 நிதியாண்டில் 10.8% என குறைந்துள்ளது.
கடன் சேர்க்கும் வேகம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது . எளிமையாக கடன் கிடைப்பதால் மக்கள் அதிக அளவில் கடன்களை வாங்குகிறார்கள். ஈஎம்ஐ, கிரெடிட் கார்டு உள்ளிட்டவை மக்களை அவர்களை அறியாமலேயே கடனாளியாக மாற்றுகின்றன.
இது ஒரு புறம் இருக்க மக்களின் சேமிப்பு முறையும் மாற்றம் கண்டுள்ளது. பாரம்பரிய வங்கி டெபாசிட்களில் இருந்து மக்கள் தங்களுடைய பணத்தை தற்போது மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட முதலீடுகள் பக்கம் திருப்பி இருக்கிறார்கள் .2019 -20ஆம் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் வெறும் 2.6 சதவீதமாக தான் இருந்தன அது 2024-25 ஆம் ஆண்டில் 13 .1 சதவீதம் என உயர்ந்திருக்கின்றன . குறிப்பாக புதிதாக மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு செய்யும் போக்கு 61,686 கோடி ரூபாயில் இருந்து 4.7 லட்சம் கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது.
More From GoodReturns

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications