கடந்த ஜூன் 2020 மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி மதிப்பீடு (Estimates of Index of Industrial Production - IIP) விவரங்கள் இன்று (11 ஆகஸ்ட் 2020) மாலை வெளியாகி இருக்கின்றன.

உலகத்தையே கொரோனா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. அந்த அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து தான் எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டி இருக்கிறது.
கடந்த மார்ச் 2020 இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட்ட லாக் டவுன் கட்டுப்பாடுகள், தற்போது மெல்ல அன்லாக் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் இன்னும் பல்வேறு தொழிற்சாலைகள் வழக்கம் போல இயங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றன. சரி இந்த முறை ஐஐபி மதிப்பீட்டில் எந்த துறை வளரும் அல்லது வளர்ச்சி குறையும், என்ன மதிப்பீடு செய்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி (IIP) இந்த ஜூன் 2020-ல் 16.6 சதவிகிதம் வீழ்ச்சி காணலாம் என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் அமைச்சகம் தன் வலைதளத்தில் சொல்லி இருக்கிறது. இது ஒரு விரைவு மதிப்பீடு (Quick Estimate) தான் எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறது.
சுரங்கத் தொழில் கடந்த ஜூன் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஜூன் 2020-ல் 19.8 சதவிகித வீழ்ச்சி காணலாம் எனக் மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்.
உற்பத்தித் துறை கடந்த ஜூன் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஜூன் 2020-ல் 17.1 சதவிகிதம் வீழ்ச்சி காணலாம் எனக் மதிப்பீடுகள் சொல்கின்றன.
அதனைத் தொடர்ந்து மின்சாரத் துறையை, ஜூன் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஜூன் 2020-ல் 10 சதவிகித வீழ்ச்சி வரலாம் என்கிறது.
பிரைமரி கூட்ஸ் துறையின் உற்பத்தியை, ஜூன் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஜூன் 2020-ல் 14.6 சதவிகிதம் வீழ்ச்சி காண வாய்ப்பு இருப்பதாக மதிப்பீடு செய்து இருக்கிறது.
கேப்பிட்டல் கூட்ஸ் உற்பத்தி, இந்த ஜூன் 2020-ல் 36.9 சதவிகிதம் வீழ்ச்சி காணலாம் என மதிப்பிட்டு இருக்கிறார்கள்.
அதே போல இண்டர்மீடியட் கூட்ஸ் 25.1 %, இன்ஃப்ராஸ்ட்ரக்சர் & கன்ஸ்ட்ரக்ஷன் 21.3 %, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் 35.5 % வீழ்ச்சி காணலாம் என மதிப்பிட்டு இருக்கிறார்கள்.
கன்ஸ்யூமர் நான் டியூரபிள்ஸ் மட்டும் 14.0 % வளர்ச்சி காணலாம் எனக் மதிப்பிட்டு இருக்கிறார்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications