பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் தொடக்க நாளான புதன்கிழமை இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் உடன் பேசுகையில், சீனாவின் வளர்ச்சிக்கு இணையாக இந்தியா உள்கட்டமைப்புத் தொடர்பான திட்டங்களில் விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
இது மட்டும் அல்லாமல் உள்கட்டமைப்பு அல்லது கட்டுமான திட்டங்களைச் சரியான நேரத்தில் முடிக்க இன்ஃப்ரா துறை மூன்று ஷிப்டுகளில் பணியாற்ற வேண்டும் என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்திக் கூறினார்.

சில வாரங்களுக்கு முன்பு மோகன்தாஸ் பாய் உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்திப் பேசும் போது, சீனாவை போல் வளர்ச்சி அடைய வேண்டுமெனில் இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்ற பேசினார். இது மக்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும், தொழிற்துறையினர் அதிகளவு ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில் சீனாவின் வளர்ச்சி உடன் போட்டிப்போட இன்ஃப்ரா துறை 3 ஷிஃப்ட் வேலை வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்திப் பெங்களூர் மெட்ரோ திட்டத்தைக் குறிப்பிட்டு உள்ளார்.
இன்ஃபோசிஸ் தலைமையகம் அமைந்துள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ மற்றும் பிற பெருநகரங்களைச் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியமான இன்ஃபரா திட்டங்கள் விரைவாக நிறைவு செய்ய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று நாராயண மூர்த்திக் கூறினார்.
உள்கட்டமைப்புத் துறையினர் மூன்று ஷிப்ட்களில் வேலை செய்ய வேண்டும், ஒரு ஷிப்ட் மட்டும் வேலை செய்யக்கூடாது என்றும் நாராயண மூர்த்திக் கூறினார். பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்த இலக்குகளைக் கொண்ட நாடுகளில், மக்கள் இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.
நாமும் அதைச் செய்தால் இந்தியா, சீனாவை விட வேகமாக வளர முடியும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை… ஆனால் அதற்கு விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும், இதேபோல் அனைத்துத் துறை தொழில்முனைவோர்களுக்கான தடைகள் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாராயண மூர்த்திப் பேசினார்.


Click it and Unblock the Notifications