இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 46 வயதான விஷால் படேல் துபாயில் ஒரு நல்ல வேலையில் இருந்து வந்தார். திடீரென அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றத்தால் அவர் துபாய் வேலையை விட்டுவிட்டு சமீபத்தில் அபுதாபியில் பிரதமர் மோடி திறந்துவைத்த BAPS கோயிலில் வேலைக்குச் சேர்ந்தார்.
இது ஒரு தன்னார்வ வேலையாகும். பரபரப்பான நிதித்துறையில் இருந்து விலகி அமைதியான சமூகப் பணியில் விஷால் படேல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

விஷாலின் குடும்பம் குஜராத்தில் இருந்து வெளிநாட்டிற்கு குடியேறிய இரண்டாம் தலைமுறையினர் ஆவர். துபாயில் இருந்த போதே விஷால் படேல் பாப்ஸ் ஸ்வாமிநாதன் சன்ஸ்தாவுடன் தொடர்பு இருந்தது.
லண்டனில் உள்ள இதே கோயிலில் விஷால் படேல் தனது இளம் வயதிலிருந்தே சேவைகளை அவர் செய்து வந்தார். அது விஷால் படேலுக்கு ஒரு ஆத்மார்த்த திருப்தியை அளித்து வந்தது.
இதுதான் அவரை அபுதாபியில் உள்ள பாப்ஸ் கோயிலில் முழுநேர அர்ப்பணிப்பை ஒப்படைப்பதற்குக் காரணமாக விளங்கியது. அதற்கு முன்பாக அவர் துபாயில் உள்ள முதலீட்டு வங்கிகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்தார்.
இதுபற்றி விஷால் படேல் கூறுகையில், 2016 முதல், நானும் எனது குடும்பத்தினரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறோம். இதற்கு முன், நான் முக்கிய முதலீட்டு வங்கிகள் மற்றும் ஹெட்ஜ் நிதிகளில் பதவிகளை வகித்ததால், எனது தொழில் எப்போதும் எனது முதன்மையான மையமாக இருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த கோயிலில் வேலை செய்வதன் மூலம், சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவும், அதிக நன்மைக்கு பங்களிக்கும் முயற்சிகளில் ஈடுபடவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார். கடந்த ஆண்டு வரை அவர் பணியாற்றிய முன்னணி முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனராக விஷால் பணியாற்றி வந்தார்.
பாப்ஸ் கோயிலில் முழுநேர தன்னார்வலராக செயல்படுவதற்கு விஷால் முடிவு செய்தபோது தான் அவரது மனநிலை எல்லாருக்கும் புரிந்தது. கோயில் கட்டும் இடத்தில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பது முதல் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவது வரை கோயில் நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களில் அவர் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டார்.
கோயிலின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக விஷால் தன்னார்வ (full-time volunteer) அடிப்படையில் ஊடக உறவுகள் மற்றும் முக்கியத் தகவல் தொடர்புகளை மேற்பார்வையிடுகிறார். அவரது வாழ்க்கைப் பயணம் ஒரு பரந்த போக்கில் அமைந்து விட்டது. அங்கு அவரைப் போன்ற தனிநபர்கள் ஒரு பெரிய காரணத்துக்காக சேவை செய்வதன் மூலம் வாழ்க்கையை சமூகப் பணிக்காகத் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர்.
வளைகுடா தேசத்தின் முதல் ஹிந்து கோயிலான பாப்ஸ் அபுதாபி கோயிலின் திறப்பு விழா, இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தியது. பாப்ஸின் ஆன்மிகத் தலைவர்களால் ஈர்க்கப்பட்டு, விஷால் எடுத்த முடிவு தனிநபர்களை வடிவமைப்பதில் சமூக நிறுவனங்களின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.
Story Written by: I. Jayachandran
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications