உலகளவில் ரெசிஷன் அச்சம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் இந்திய ஐடி சேவை துறை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கிகள் வீழ்ச்சி இந்திய ஐடித்துறையை பல வகையில் பாதிக்க துவங்கியுள்ளது.
இந்தியா ஐடி சேவை துறையில் பெரும் பகுதி வருவாய், வர்த்தகம் BFSI பிரிவில் இருந்து கிடைக்கும் நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வருவது மட்டும் அல்லாமல் பெரிய வங்கிகள் பணப்புழக்க பாதிப்பில் மாடிக்கொண்டு இருக்கும் நிலையில், திவாலாகாமல் தப்பித்தால் போதும் என நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இந்திய ஐடி சேவை துறையின் BPM அதாவது ஐடி பிஸ்னஸ் பிராசஸ் மேனேஜ்மென்ட் துறை தற்போது பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளது.
ஐடி பிஸ்னஸ் பிராசஸ் மேனேஜ்மென்ட்
இந்திய ஐடி பிஸ்னஸ் பிராசஸ் மேனேஜ்மென்ட் துறை-யின் 245 பில்லியன் டாலர் வர்த்தக சந்தையில் சுமார் 41 சதவீதம் BFSI எனப்படும் பேங்கிங், பைனான்சியல் சரிவீசஸ், இன்சூரன்ஸ் துறையை மட்டுமே சார்ந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கிகள் வீழ்ச்சி இந்திய ஐடித்துறையை பல வகையில் பாதிக்க துவங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கிகள் வீழ்ச்சி மூலம் இந்திய ஐடி BPM நிறுவனங்களின் தற்போது கையில் இருக்கும் வர்த்தகத்தை இழப்பது மட்டும் அல்லாமல் அடுத்த சில வருடங்களுக்கு வங்கிகளின் டெக் சேவைகளுக்குக்கான செலவுகளும் குறையும் நிலை உருவாகியுள்ளது.
நீண்ட கால பாதிப்பு
இதனால் இந்திய ஐடி BPM நிறுவனங்களின் வர்த்தக பாதிப்பு தற்காலிகமானது மட்டும் நீண்ட கால பாதிப்பாகவும் மாறியுள்ளது. இதனால் இந்திய ஐடி BPM நிறுவனங்களில் பணிநீக்க அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவது, சம்பள உயர்வு ஆகிய அனைத்தும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ
இந்திய ஐடி BPM துறையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, LTIMindtree ஆகியவை அதிகப்படியான வர்த்தகத்தை அமெரிக்க சந்தையில் வைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கிகள் வீழ்ச்சி தொடர்ந்தாலோ அல்லது பாதிப்பு அதிகரித்தாலோ இந்திய ஐடி BPM துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பாதிக்க துவங்க உள்ளது.
BFSI பிரிவு
அமெரிக்காவில் பிராந்திய வங்கிகள் BFSI பிரிவில் மட்டும் அல்லாமல் அந்நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைமையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க பிராந்திய வங்கிகளின் நிலைமை குறித்து பெடரல் வங்கியின் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் எதிரொலிக்கும்.
வட அமெரிக்க வங்கிகள்
வட அமெரிக்க வங்கிகள் மட்டும் டெக் சேவைகளுக்காக 2022 ஆம் ஆண்டு மட்டும் 82 பில்லியன் டாலர் அளவிலான தொகையை செலவிட முடிவு செய்துள்ளது. இப்பிரிவில் உலகளாவிய முதலீட்டு தொகை 250 பில்லியன் டாலராகும். இந்திய ஐடி துறைக்கு BFSI முக்கியமான துறையாக விளங்கும் நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய வங்கி சூழ்நிலை நேரடியாக பாதிக்கும்.


Click it and Unblock the Notifications