இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிகப்படியான வேலைவாய்ப்பையும், சராசரியாக அதிகப்படியான சம்பளத்தை அளிப்பது ஐடி துறை நிறுவனங்கள் தான்.
இதனாலேயே இந்திய குடும்பங்கள் மத்தியில் ஐடி வேலையில் சேர்ந்து விட்டாலே வாழ்க்கை செட்டிலாகிவிட்டது போன்ற பிம்பம் உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு ஐடி துறையில் சேரும் புதிய ஊழியர்கள் அதாவது பிரஷ்ஷர்கள் தொடர்ந்து குறைவான சம்பளத்தையே அளித்து வருகிறது.
இது எத்தனை பேருக்கு தெரியுமா..?
இன்போசிஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் சிஇஓ 10 வருடத்திற்கு முன்பு வருடம் 80 லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்ற நிலையில், 2022ஆம் நிதியாண்டில் 79.75 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் இன்போசிஸ் பிரஷ்ஷர்களின் சம்பளம் இந்த 10 வருடத்தில் 2.75 லட்சம் ரூபாயில் இருந்து 3.6 லட்சமாக மட்டுமே உயர்ந்துள்ளது.
மீடியன் சம்பள அளவு
கடந்த 10 வருடத்தில் இந்திய ஐடி நிறுவனங்களின் சிஇஓ-வின் மீடியன் சம்பளம் 3.37 கோடி ரூபாயில் இருந்து 31.5 கோடி ரூபாயாக உயர்ந்து 835 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால் ஒரு பிரஷ்ஷரின் சம்பளம் 2.45 லட்சம் ரூபாயில் இருந்து 3.55 லட்சமாக மட்டுமே அதிகரித்து 45% உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ளது.
எவ்வளவு பெரிய பாரபட்சம் பார்த்தீங்களா..?
ஐடி நிறுவனங்கள்
இது இன்போசிஸ் நிருவனத்தில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி நிறுவனங்களிலும் உள்ளது. சிஇஓ மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது, உதாரணமாக இன்போசிஸ்-ல் 1973, விப்ரோவில் 2111, ஹெச்சிஎல் நிறுவனத்தில் 1020, எல் அண்ட் டி 676, டெக் மஹிந்திராவில் 644, டிசிஎஸ் நிறுவனத்தில் 619 ஆக உள்ளது.
சிஇஓ சம்பள உயர்வு
டீம் லீஸ் நிறுவனம் வெளியிட்டுள் தரவுகள் படி கடந்த 10 வடருத்தில் இந்திய ஐடி நிறுவனங்களின் சம்பளம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என நீங்களே பாருங்கள்.
இன்போசிஸ் - ரூ. 80 லட்சத்தில் இருந்து ரூ.79.75 கோடி
விப்ரோ - ரூ.5.1 கோடியில் இருந்து ரூ.64 கோடி
டிசிஎஸ் - ரூ.8 கோடியில் இருந்து ரூ.34 கோடி
டெக் மஹிந்திரா - ரூ.1 கோடியில் (FY13) இருந்து ரூ.29 கோடி
எல் அண்ட் டி இன்போடெக் - ரூ.1.63 கோடியில் இருந்து ரூ.26 கோடி
ஹெச்சிஎல் - ரூ.8.4 கோடியில் இருந்து ரூ.22 கோடி
மீடியன் அளவை பார்க்கும் போது 3.37 கோடி ரூபாயில் இருந்து 31.5 கோசி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பிரஷ்ஷர்கள் சம்பளம் உயர்வு
இன்போசிஸ் - ரூ. 2.75 லட்சத்தில் இருந்து ரூ.3.6 லட்சம்
விப்ரோ - ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சம்
டிசிஎஸ் - ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம்
டெக் மஹிந்திரா - ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3.4 லட்சம்
எல் அண்ட் டி இன்போடெக் - ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சம்
ஹெச்சிஎல் - ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சம்
மீடியன் அளவை பார்க்கும் போது 2.45 லட்சத்தில் இருந்து ரூ.3.55 லட்சமாக மட்டுமே உயர்ந்துள்ளது.
மோகன்தாஸ் பாய்
இன்போசிஸின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் கூறுகையில், "சிஇஓ மற்றும் பிரஷ்ஷர்கள் இடையேயான ஊதியத்தில் இந்த அளவு ஏற்றத்தாழ்வு இன்று ஐடி துறையில் உயர்மட்டத்தில் உள்ள கூலி பணி மனப்பான்மையைக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அணுகுமுறை
இந்திய கார்ப்பரேட் கலாச்சாரம் எப்போதும் நிறுவனத்தில் உள்ள அனைவரின் நலனுக்கும் பொறுப்பேற்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மேல்மட்டத்தில் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் அமெரிக்க அணுகுமுறையை மேற்கொள்வது கவலை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்
இந்தச் சம்பள வித்தியாசம் தான் ஐடி துறையில் பெரும்பாலான காலகட்டத்தில் ஊழியர்கள் அதிகமாக வெளியேறும் நிலை உள்ளது. தற்போது இந்திய ஐடி துறையில் நடுத்தர - உயர்மட்ட ஊழியர்கள் வரையில் 15-20 சதவீத வெளியேற்ற விகிதமும், ஜூனியர் பிரிவு ஊழியர்கள் மத்தியில் வெளியேற்ற விகிதம் 30-35 சதவீதமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications