அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜூன் 22ஆம் தேதி கொரோனா பாதிப்பில் பல கோடி அமெரிக்க மக்கள் வேலைவாய்ப்பா இழந்து நிற்கும் இந்த நேரத்தில், வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பை முழுமையாகக் குறைத்து அதை அப்படியே அமெரிக்கர்களுக்குக் கொடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அனைத்து விசா-க்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்க அரசின் இந்த முடிவு இந்திய ஐடி நிறுவனங்களுக்கும், இந்திய ஐடி ஊழியர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது மட்டுமல்லாமல் மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்களை ஆட்டிவைக்கும் அளவிற்கு இந்த அறிவிப்பு உள்ளது என்றால், இந்திய ஐடி நிறுவனங்கள் எந்த அளவிற்கு இந்த விசாவை நம்பி தனது வர்த்தகத்தைச் செய்கிறது..? வாங்கப் பார்ப்போம்.
ஐடி நிறுவனங்கள்
டிசிஎஸ், காக்னிசென்ட், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ ஆகியவற்றையும் சேர்த்து இந்திய ஐடி நிறுவனங்கள் சுமார் 79,649 பேரை தற்போது விசா மூலம் அமெரிக்காவில் பணியில் அமர்த்தியுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவில் சுமார் 54,874 பேரை பணியில் அமர்த்தித் தனது வர்த்தகத்தை நடத்தி வரும் நிலையில் 2,195 பேரை L1 விசா-விலும், 19,755 பேரை ஹெச்1பி விசா-விலும் பணியில் அமர்த்தியுள்ளது மீதமுள்ளவர்கள் அமெரிக்கர்கள். இதன் மூலம் கிட்டதட்ட 40 சதவீத ஊழியர்களை விசா மூலம் பணியில் அமர்த்தியுள்ளது டிசிஎஸ்.
இதேபோல் காக்னிசென்ட் 50 சதவீதம், இன்போசிஸ் 40 சதவீதம், விப்ரோ 35 சதவீதம், ஹெச்சிஎல் 35 சதவீதம், டெக் மஹிந்திரா 50 சதவீதம் அளவீட்டில் விசாவை நம்பி வர்த்தகம் செய்கிறது.
பாதிப்பு
தற்போது விதிக்கப்பட்டுள்ள உத்தரவால் தற்போது விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கும் பிற நாடவர்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை, ஆனால் விசாவை புதுப்பிக்கும் போது அமெரிக்க அரசு அதிகளவில் நிராகரிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாக 2016 வெறும் 4 சதவீதமாக இருந்த விசா நிராகரிப்பு 2020ல் 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் பல இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இந்நிலையில் இனி வரும் காலத்தின் அளவீடு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
ஜாக்பாட்
தற்போது நிலவும் சூழ்நிலையில் புதிதாக யாரும் அமெரிக்கா சென்று பணியாற்ற முடியாது என்றாலும், ஏற்கனவே விசா பெற்ற அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திய ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்திய ஐடி ஊழியர்களின் தேவை அதிகமாக இருக்கும் இந்தத் தேவையில், புதிதாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலையில் நம்ம ஊர் பசங்களுக்குச் செம டிமாண்டு இருக்கும்.


Click it and Unblock the Notifications