இந்தியாவின் மிகப்பெரிய சேவை துறையாக இருந்து வரும் தகவல் தொழில் நுட்ப துறையானது, இந்தியாவில் அதிகளவில் வேலை வாய்ப்பினை கொடுத்து வரும் ஒரு துறையாக இருந்து வருகின்றது.
இப்படி பல லட்சக்கணக்கானோருக்கு வாய்ப்பினை கொடுக்கும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, ஹேக்கர்களால் அச்சுறுத்தல் உள்ளதாக, உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் சமீபத்திய இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது அமெரிக்காவிடம் இருந்தோ அல்லது சீனாவிடம் இருந்தோ வரவில்லை.
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
அது ஈரானிய ஹேக்கர்களிடம் இருந்து வந்திருக்கலாம். ஈரானிய ஹேக்கர்கள் இந்திய ஐடி நிறுவனங்களை குறிவைப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த தாக்குதலின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. முன்னதாக சீன ஹேக்கர்கள் நாட்டை குறிவைப்பது குறித்து மைக்ரோசாப்ட் எச்சரித்திருந்தது.
அச்சுறுத்தல் வளர்ந்து வருகின்றது
ஜூலை 2021க்கு முன்னர் ஈரானிய ஹேக்கர்கள் இந்தியாவை குறிவைப்பது குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இது தொடர்ந்து அதிகரித்து வரத் தொடங்கியுள்ளது. இந்தியாவும் பிற நாடுகளும் முக்கிய தகவல் தொழில் நுட்ப சேவை மையங்களாக உயர்ந்து வரும் நிலையில், இது போன்ற அச்சுறுத்தல்கள் வந்துள்ளது.
இணையத் தாக்குதல்கள்
மைக்ரோசாப்ட் அறிக்கையின் படி 2020ல் வெளியிடப்பட்ட 48 அறிவிப்புகளுடன் ஒப்பிடும்போது, உலகளவில் 40க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு, இந்த ஆண்டு ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் 1,600 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களை குறி வைத்து அதிக இணையத் தாக்குதல்களை உள்ள அதேசமயம், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன.
பெரும் அச்சுறுத்தல்
இணையம் மூலம் தரவுகளைத் திருடிக்கொண்டோ அல்லது இணையதளம் இயங்குவதை முடுக்கி வைத்த பின்னரோ, தரவுகளை ஒப்படைக்க அல்லது இணையதளத்தை மீண்டும் இயங்க வைக்க பிணைத் தொகை கேட்டு ஹேக்கர்கள் தாக்குதல் நடத்துவது சமீபத்திய காலங்களில் அதிகரித்துள்ளது. அதிலும் சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்கள் மேம்பட்டு வரும் நிலையில், இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications