அமெரிக்க ஐடி நிறுவனம் Vs இந்திய ஐடி நிறுவனம்! யாருக்கு H-1B விசா மறுப்பு அதிகம் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாசிங்டன்: அமெரிக்கா என்ற உடன், நம் இந்தியர்களுக்கு சுதந்திர தேவி சிலையோ அல்லது அமெரிக்காவின் நட்சத்திரம் பதித்த கொடியோ நினைவுக்கு வருவதை விட வேறு ஒரு விஷயம் தான் அதிகம் நினைவில் வருகிறது.

அதாங்க, H-1B விசா. இந்த விசா பிரச்சனையைப் பற்றி, இந்திய தரப்பும் சரி, அமெரிக்க தரப்பும் சரி பல முறை பேசி இருக்கிறார்கள்.

ஆனால் இதுவரை ஒரு நல்ல தீர்வு கிடைத்ததாகத் தெரியவில்லை. சரி H-1B விசாவில் இருந்து தொடங்குவோம்.

H-1B விசா

H-1B விசா

இந்த ரக விசாவைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம். இது ஒரு non-immigrant விசா. இந்த விசாவை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் வேலை பார்க்கலாம். அதுவும் சாதாரண வேலை எல்லாம் பார்க்க முடியாது. தியரியாகவோ அல்லது டெக்னிக்கலாகவோ சிறப்புத் திறன் வாய்ந்த வேலைகளுக்கு மட்டுமே இந்த விசாவைப் பயன்படுத்த முடியும்.

ஐடி கம்பெனிகள்

ஐடி கம்பெனிகள்

இந்திய ஐடி கம்பெனிகளோ அல்லது வெளிநாட்டு ஐடி கம்பெனிகளோ, தங்கள் ஊழியர்களை அமெரிக்காவுக்குள் கொண்டு வர, இந்த H-1B ரக விசாவைத் தான் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து பணியாளர்களை வேலைக்கு எடுக்க, இந்த விசாவை அதிகம் பயன்படுத்துகிறார்களாம்.

மறுப்பு

மறுப்பு

சமீப காலமாக, அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஐடி நிறுவனங்களை சமமாக நடத்தவில்லை, இந்திய நிறுவனங்களுக்கு அதிகம் விசா மறுக்கப்படுகிறது போன்ற செய்திகள் வெளியாகிக் கொண்டு இருந்தன. ஆனால் இப்போது National Foundation for American Policy என்கிற அமைப்பு தற்போது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மறுக்கப்படும் H-1B விசா விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு மறுப்பு

அமெரிக்க நிறுவனங்களுக்கு மறுப்பு

கடந்த 2019-ம் ஆண்டு, அமெரிக்காவின் அமேசான் & கூகுள் போன்ற நிறுவனங்கள் H-1B விசாவுக்கு விண்ணப்பித்ததில் சுமாராக 4 சதவிகித விண்ணப்பங்கள் மட்டுமே மறுக்கப்பட்டதாம். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்ணப்பங்களில் 6 சதவிகிதமும், ஃபேஸ்புக் & வால்மார்ட் விண்ணப்பித்தவைகளில் 3 சதவிகித விண்ணப்பங்கள் மட்டுமே மறுக்கப்பட்டு இருக்கிறதாம்.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இந்தியாவின் ஐடி ஜாம்பவான்களான டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த விண்ணப்பத்தில் 31 % விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டு இருக்கிறதாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு 35 % விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டு இருக்கிறதாம். விப்ரோ-க்கு 47 %, டெக் மஹிந்திராவுக்கு 37% H-1B விசா மறுக்கப்பட்டு இருக்கிறதாம். ஆக இந்திய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் அதிக அளவில் மறுக்கப்படுகிறது என்பதை, இந்த தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: it companies visa விசா
English summary

indian IT companies face more denial for H-1B visa

Indian IT companies like Tata consultancy services Infosys, Wipro are facing more H-1B visa rejection than American IT companies.
Story first published: Thursday, March 5, 2020, 19:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X