இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது அட்ரிஷன் அளவு தான், முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் 4ல் ஒரு ஊழியர் வெளியேறும் நிலையில் இருந்தது மறக்க முடியாது.
அட்ரிஷன் விகிதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது பெரிய அளவில் பாதிப்பது மட்டும் அல்லாமல் உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ப்ராஜெக்ட்-ஐ முடிக்க முடியாது. இதைவிட முக்கியமாக வெளியேறும் ஊழியர் இடத்தில் புதிதாக ஒருவரை நியமிக்கும் பட்சத்தில் அதிக தொகையை கொடுத்து நியமிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இது நிறுவனத்தின் லாபத்தில் பெரிய ஓட்டையை உருவாக்கும்.

இதற்கு உதாரணமாக இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் 2021-22 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 14 சதவீதமாக இருந்த அட்ரிஷன் விகிதம் 2022-23 ஆம் நிதியாண்டில் 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களுக்கும் இதே நிலை தான்.
இதேபோல் டீம்லீஸ் செய்ய ஒரு ஆய்வின் அறிக்கை செப்டம்பர் 2022ல் வெளியானது, 12 மாத காலத்தில் ஐடி துறையில் பணியை ராஜினாமா செய்த சுமார் 57 சதவீத ஊழியர்கள் ஐடி துறைக்குள் மீண்டும் நுழைய விருப்பம் இல்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்களை நியமித்து அதிக தொகையை டிரைனிங்-கிற்காக செலவு செய்ய வேண்டும் எனவும் பயிற்சி காலத்தில் எவ்விதமான வருமானமும் ஐடி நிறுவனங்கள் பெற முடியாத நிலையும் உள்ளதாக டீம்லீஸ் ஆய்வு கூறுகிறது.
சமீபத்தில் இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரியான நிலன்ஞன் ராய் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு பேசுகையில், ஐடி சேவை துறையில் புதிய ஆர்டர்கள் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் ஊழியர்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் மார்ச் காலாண்டில் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்கள் அளவு மொத்த ஊழியர்களில் 20 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இதேபோல் ப்ராஜெக்ட்-ல் இருக்கும் ஊழியர்களை பயன்படுத்தும் அளவு 80 சதவீதமாக குறைந்துள்ளது, இதுவும் டிமாண்ட் அளவில் ஏற்பட்ட சரிவு தான் காரணம் என தெரிவத்துள்ளார். இந்த பிரச்சனைகளும் ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை அளிக்கிறது.
இதேவேளையில் கடந்த ஒரு வருடத்தில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா பங்குகள் பெரிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது. டாப் 5 நிறுவனங்களில் குறைவான சரிவை பதிவு செய்துள்ளது ஹெச்சிஎல் மட்டுமே.
கடந்த ஒரு வருடத்தில்
டிசிஎஸ் - 10.15 சதவீதம் சரிவு
இன்போசிஸ் - 20.97 சதவீதம் சரிவு
ஹெச்சிஎல் - 2.79 சதவீதம் சரிவு
விப்ரோ - 27.88 சதவீதம் சரிவு
டெக் மஹிந்திரா - 21.01 சதவீதம் சரிவு
LTIMindtree - 13.74 சதவீதம் சரிவு
Mphasis - 37.07 சதவீதம் சரிவு
2023 ஆம் ஆண்டில்
டிசிஎஸ் - 1.87 சதவீதம் சரிவு
இன்போசிஸ் - 19.47 சதவீதம் சரிவு
ஹெச்சிஎல் - 2.53 சதவீதம் உயர்வு
விப்ரோ - 4.73 சதவீதம் சரிவு
டெக் மஹிந்திரா - 1.29 சதவீதம் சரிவு
LTIMindtree - 3.85 சதவீதம் சரிவு
Mphasis - 10.64 சதவீதம் சரிவு


Click it and Unblock the Notifications