தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒரு இலக்கத்திற்கு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு இரண்டு இலக்கங்களில் ஊதிய உயர்வினை வழங்கி வந்த நிலையில் இந்த ஆண்டு அது ஒரு இலக்கமாக குறைந்துள்ளது.
ஐடி நிறுவனங்களின் ஆண்டு நிதி அறிக்கை அடிப்படையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், 2024ஆம் நிதியாண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 5% - 9% வரை ஊதிய உயர்வு வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக தங்களது ஊழியர்களுக்கு அதிகபட்ச ஊதிய உயர்வு வழங்குவது இன்போசிஸ் நிறுவனம் தான். ஆனால் இந்த முறை இன்போசிஸ் நிறுவனமே ஊழியர்களுக்கு சராசரியாக 9% ஊதிய உயர்வினை மட்டுமே தந்துள்ளது.

2024 ஆம் நிதி ஆண்டில் டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 7%- 9% ஊதிய உயர்வினை தந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 9%, விப்ரோ 9.4 %, டெக் மகேந்திரா 5.6% என தங்களது ஊதிய உயர்வு விகிதத்தினை குறைத்துள்ளன. இதே நிறுவனங்கள் 2022ஆம் நிதியாண்டில் 10% - 15 % சதவீதம் வரை ஊதிய உயர்வு தந்திருந்தன.
தற்போது நிலவி வரக்கூடிய பொருளாதார சூழல் காரணமாக ஐடி நிறுவனங்கள் தங்களுடைய செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன இதன் ஒரு பகுதியாக தங்கள் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வினை குறைத்து இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஐடி நிறுவனங்களில் மொத்த தொழிலுக்கான செலவு அதிகரித்து வருவது மற்றும் இந்தியாவில் நுழைவு நிலையில் வேலைக்கு அதிகமானவர்கள் தயாராக இருப்பது ஆக இரண்டு காரணங்களால் ஐடி நிறுவனங்கள் ஊதிய உயர்வினை குறைத்து இருப்பதாக தெரிவிக்கிறது ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்யும் ஒரு அமைப்பு.
அதே வேளையில் ஐடி நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவு கொண்ட திறமையான பணியாளர்களுக்கு 12 முதல் 15 % வரை ஊதிய உயர்வு அளித்து அவர்களை தக்க வைத்துள்ளன துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவு, மிசின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் ஆகியவற்றில் சிறந்து விளங்கக்கூடிய நபர்களுக்கான ஊதிய உயர்வு இரண்டு இலக்கத்தில் தான் இருக்கிறது என கூறுகின்றனர்.
எனவே ஐடி துறையில் கால் பதிக்க விரும்புவோர் இது போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றுக் கொள்வது அதிகபட்ச ஊதிய உயர்வுக்கு வழி வகுக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications