உலக நாடுகளில் ரெசிஷன் அச்சம் அதிகமாக இருந்த நேரத்திலும் இந்திய ஐடி நிறுவனங்கள் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் வேகமாக வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் சில முன்னணி நிறுவனங்கள் பெரிய ஒப்பந்தங்களையும் பெற்று வந்தது.
ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கிகள் திவாலாகியும், நிதி நெருக்கடியிலும் சிக்கிக்கொண்ட பின் இந்திய ஐடி சேவை நிறுவனத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட துவங்கியது. உதாரணமாக இன்போசிஸ் BFSI பிரிவு தலைவர் மோஹித் ஜோஷி ராஜினாமா செய்துவிட்டு டெக் மஹிந்திராவுக்கு மாறினார், டிசிஎஸ் நிறுவனத்தின் BFSI பிரிவின் தலைவர் கிருதிவாசன் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அயர்லாந்து நாட்டை சேர்ந்த அக்சென்சர் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 19000 ஊழியர்களை அடுத்த 18 மாதத்தில் பணிநீக்கம் செய்வதாகவும், குறிப்பாக உயர் அதிகாரிகள் பிரிவில் அதிக பணிநீக்கம் என இந்நிறுவன சிஇஓ ஜூலி ஸ்வீட் தெரிவித்தார்.
அக்சென்சர் நிறுவன முடிவு
அக்சென்சர் நிறுவனத்தின் தாக்கம் இந்திய ஐடி நிறுவனங்களில் கட்டாயம் இருக்கும் என சந்தை வல்லுனர்கள் கூறி வரும் வேளையில், மற்றொரு முக்கியமான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் புதிதாக ஒரு நிறுவனத்தில் சேர திட்டமிடுவோர் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆட்சேர்ப்பு அளவு
2024 ஆம் நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் வர்த்தகம், வருவாய் குறித்த அச்சம் அதிகரித்துள்ள வேளையில் Hiring அளவு பாதியாக குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு புதிய வேலைவாய்ப்புகள் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
50% வரை சரியும்
2024 ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்களில் ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களின் சேர்ப்பு விகிதம் முந்திய நிதியாண்டை ஒப்பிடுகையில் 40 முதல் 50 சதவீதம் வரையில் குறையும் என கணித்துள்ளது TeamLease. இதனால் பணிநீக்கம் செய்யும் நிலை ஏற்படாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
280,000 ஊழியர்கள்
2023 ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் சுமார் 280,000 ஊழியர்களை பணியில் சேர்த்துள்ளது, 4வது காலாண்டில் ஊழியர்கள் சேர்க்கை 3வது காலாண்டை போலவே மந்தமாக தான் உள்ளது. கடந்த சில காலாண்டுகளில் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் அட்ரிஷன் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
6 மாத காலம்
இந்த நிலை அடுத்த 6 மாதத்தில் மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது, இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி அளவீடுகளை வைத்து தான் ஊழியர்கள் சேர்க்கை நடைப்பெறும். நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் டெக் சேவைகளுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்க வேண்டும், இதேபோல் டெக் சேவைக்கு செலவு செய்ய நிறுவனங்கள் முன்வர வேண்டும். இது நடந்தால் மட்டுமே நிலைமை மாறக்கூடும்.
வருவாய், வளர்ச்சி பேட்டர்ன்
அக்சென்சர், இந்திய நிறுவனமாக இல்லாவிட்டாலும், இந்தியாவில் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஐ காட்டிலும் வருவாய், ஊழியர்கள் என அனைத்திலும் பெரியது. அக்சென்சர் நிறுவனத்தின் வருவாய், வளர்ச்சி பேட்டர்ன் தான் இந்திய ஐடி நிறுவனத்திலும் பிரதிபலிக்கிறது, இதனாலேயே பணிநீக்கம் குறித்த அச்சம் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications