இந்தியாவில் படித்தால் போதும் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்று பல கோடி இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நம்பிக்கை வித்து விதைத்து ஐடி துறை என்றால் மிகையில்லை. இந்த ஆண்டு மட்டும் இந்திய ஐடி நிறுவனங்களில் எப்போதும் இல்லாத அளவிற்குச் சுமார் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக உலக நாடுகளில் இருந்து ஐடி ஆட்டோமேஷன் மற்றும் புதிய தொழில்நுட்பத்திற்கு மாறும் பல திட்டங்களை இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் பெற்று வருகிறது. திடீரென அதிகளவிலான வர்த்தகம் கிடைக்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை.
இதன் காரணமாக நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களை இந்த ஆண்டுப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் கல்லூரி படிப்பை முடிந்த மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
இந்திய ஐடி துறை
இந்திய ஐடி துறையில் வர்த்தக முறையில் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இதேபோல் பல புதிய தொழில்நுட்பத்தில் அதிகளவிலான திட்டங்கள் பெற்றுள்ள வேளையில் இத்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் ஐடி துறையில் ஊழியர்களுக்கான டிமாண்ட் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதேவேளையில் அதிகளவிலான போட்டியும் உருவாகியுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை
இந்த ஊழியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க இந்திய ஐடி நிறுவனங்கள் திறன் வாய்ந்த ஊழியர்களை அதிகளவில் வேலைக்குச் சேர்ப்பதை விடவும் பிரஷ்ஷர்கள் அதாவது கல்லூரி படிப்பு முடிந்த மாணவர்களும், ஐடி துறை சார்ந்த திறன்களைக் கொண்டு இருக்கும் பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 1,00,000 பிரஷ்ஷர்களுக்கு இந்திய ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் நாடு முழுவதும் மாணவர்களையும், பட்டதாரிகளையும் எவ்விதமான கட்டுப்பாடுகள் இல்லாமல் தனது National Qualifier Test (NQT) மூலம் தேர்வு செய்து வருகிறது. இந்த வருடம் லாக்டவுன் காரணமாகப் பெரும்பாலான பிரஷ்ஷர்கள் தேர்வை NQT தேர்வு வாயிலாகவே செய்து வருவதாக டிசிஎஸ் நிறுவனம் செய்து வருகிறது.
ஆண்டு முழுவதும் வேலை
Persistant Systems நிறுவனம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ள காரணத்தால் கல்லூரி ஆண்டு இறுதியில் மட்டும் தேர்வு செய்யும் வழக்கத்தை மாற்றி விட்டு வருடம் முழுவதும் பிரஷ்ஷர்களைத் தேர்வு செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது என்று இந்நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரி சமீர் பின்திரே தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப் மற்றும் சிறு ஐடி நிறுவனங்கள்
இதுமட்டும் அல்லாமல் பெரு நிறுவனங்களைத் தாண்டி ஸ்டார்ட்அப் மற்றும் சிறு ஐடி நிறுவனங்களும் செலவுகளைக் கட்டுப்படுத்த வழக்கத்தை விடவும் அதிகளவிலான ஐடி ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளது. இதேபோல் தற்போது பணியில் சேர்க்கப்படும் பிரஷ்ஷர்கள் பெரும்பாலானோர் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications