இந்தியாவில் 250 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய வர்த்தக சந்தை கொண்ட ஐடி துறை பல வர்த்தக பாதிப்புகளைக் கடந்து, ஐரோப்பியச் சந்தையிலும், அமெரிக்க சந்தையில் இருந்தும் புது புது திட்டங்களை பெற்று வருகிறது.
இதேவேளையில் டிசிஎஸ் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்கும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது, இதற்காக அறிவிப்புகளையும் தேசிய அளவிலான நடக்கும் தேர்வு குறித்த அறிவிப்புகளையும் விடுத்துள்ளது. இவை அனைத்தும் ஐடித் துறைக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாகி வருவதைக் காட்டுகிறது.

இந்த சூழ்நிலையில் ஐடி துறை நிறுவனங்கள் மத்தியில் மீண்டும் உயர் அதிகாரிகளை ஈர்க்கும் பணிகள் துவங்கியது. ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டின் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் சக போட்டி நிறுவனத்தில் இருந்து மூத்த அதிகாரிகளை ஈர்த்து வந்தது பெரும் பிரச்சனையாக வெடித்தது.
இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நிறுத்தப்பட்டிருந்த அல்லது குறைவாக இருந்த தலைமை நிலை ஊழியர்களுக்கான (CXO and CXO-1) தேடல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து நிர்வாக பணியிட தேடல் மற்றும் பணியமர்வு நிறுவனங்களின் கூறுகையில், இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய நாடுகளில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில், காலியாக இருக்கும் அல்லது தேவைப்படும் தலைமை மற்றும் மூத்த நிலை பணியிடங்களை நிரப்பவும், புதிய பதவிகளை உருவாக்கி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் ஐடி நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன.
இதனால் அடுத்த சில காலாண்டுகளுக்கு CXO மற்றும் CXO-1 பிரிவில் இருக்கும் அதிகாரிகள் இடம் மாற்றுவது தொடர் கதையாகும். இது பணம் பலம் அதிகம் கொண்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், ஏற்கனவே புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவிக்கும் நிறுவனங்களுக்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
மேலும் இரண்டாம் நிலை நிறுவனங்கள் கூட சி-சூட் (C-suite - தலைமை செயல் அதிகாரி குழு) அதிகாரிகளைத் தேடி வருகின்றன. முன்னணி ஐடி நிறுவனங்களும் கூட கணிசமான அளவில் தேடல் பணிகளைத் தொடங்கியுள்ளன என்று நிர்வாக பணி தேடல் மற்றும் திறமை ஆலோசனை நிறுவனமான ஏபிசி கன்சல்டன்ட்ஸின் (ABC Consultants) மூத்த பங்குதாரர் திருமதி ரத்னா குப்தா தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப துறையில் நிலவும் தற்போதைய போக்கு, பொருளாதார வளர்ச்சிக்கான நம்பிக்கையை அளிக்கிறது. தேர்தல் முடிவுகளுக்கும் (இந்தியா, அமெரிக்கா) பிறகு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுவதும், உலகளவில் பொருளாதாரம் மேம்படுவதும் எதிர்பார்க்கப்படுவதால், ஐடி நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சி திட்டங்களை மீண்டும் தூசி தட்ட தொடங்கியுள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப துறையில் தலைமை நிலை பணியிடங்களுக்கான தேடல் அதிகரிப்பது, இந்த துறையில் வேலைவாய்ப்பு சந்தை களைக்கட்டத் தொடங்கியிருப்பதற்கான சிக்னஸ். நீங்களும் ஐடி ஊழியராக இருந்தால் புதிய வேலைக்கு மாற தயாராக இருங்க.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications