அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு தான் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திலிருந்தே அறிவுறுத்தி வருகிறார் டொனால்ட் டிரம்ப். அதற்கேற்ற வகையில் தான் அதிபராக பதவியேற்றது முதலே அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுக்க பயன்படுத்தும் ஹெச் 1பி விசா முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
ஏற்கனவே அமெரிக்காவில் தங்கிய வேலை செய்யக்கூடிய நபர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகளை டிரம்ப் அரசாங்கம் தந்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழலில் தான் அமெரிக்க அரசு HIRE act என்ற ஒரு சட்டத்தை கொண்டு வருவதில் மிகத் தீவிரமாக இருக்கிறது . அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் ஐடி சேவையை பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வரக்கூடிய வகையில் இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

குடியரசு கட்சி உறுப்பினரால் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி நிறுவனங்களின் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்த சட்டத்தின் பின்னணியில் இருப்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக பிரிவு ஆலோசகர் ஆன பீட்டர் நவாரோ தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் அனைத்து வகையான அவுட்சோர்சிங் மற்றும் வெளிநாட்டு ரிமோட் பணியாளர்களிடம் பெரும் சேவைகளுக்கும் வரி விதிக்க வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை வழங்கியிருந்தார் .
அந்த பரிந்துரையின் அடிப்படையில் தான் இந்த HIRE சட்டமே தற்போது அமெரிக்க செனட் அவையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது . விரைவில் இதனை சட்டமாக்க குடியரசு கட்சி தீவிரமாக இருக்கிறது. இந்த சட்டத்தின் படி எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனம் அல்லது வெளிநாட்டை சேர்ந்த ஊழியரிடமிருந்து ஒரு வேலையை பெற்று அதனை அமெரிக்க மக்களுக்காக பயன்படுத்துகிறது என்றால் அதனை அவுட்சோர்சிங் வேலை என அழைக்கிறார்கள். இந்த அவுட்சோசிங் வேலைக்காக அமெரிக்க நிறுவனம் செலுத்தக்கூடிய கட்டணத்தில் 25 சதவீதத்தை அமெரிக்க அரசாங்கத்திற்கு இனி வரியாக செலுத்த வேண்டும்.
இது அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். இந்த HIRE சட்டம் நேரடியாகவே இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களை தான் பெருமளவில் பாதிக்க இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் மந்த நிலையில் இருக்கின்றன . இந்திய ஐடி நிறுவனங்களின் ஐடி அவுட் சோர்சிங் வருமானம் கிட்டத்தட்ட 60% அமெரிக்க கிளைண்டுகளிடம் இருந்து தான் கிடைக்கிறது. இது சட்டமாக வந்தால் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் இனி வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து சேவையை பெறுவதை படிப்படியாக குறைத்துக் கொள்ளும்.
ஏனெனில் உள்நாட்டிலேயே அந்த சேவையை பெறுவதற்கும் வெளிநாட்டில் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து பெறுவதற்கும் அமெரிக்க நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். எனவே இது இந்தியாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை வழங்கக்கூடிய பல்வேறு ஐடி நிறுவனங்களின் வருவாயில் நேரடியாக கை வைக்கிறது.
பெரிய அளவிலான அதிக மதிப்பு கொண்ட ஒப்பந்தங்களை இந்திய நிறுவனங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் , புதிதாக ஒப்பந்தங்கள் கிடைக்காது, ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுவதும் பிரச்சனையை சந்திக்கலாம். இந்திய ஐடி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பாக செயல்படும் நாஸ்காம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐடி சேவைகளின் மதிப்பு 224 பில்லியன் டாலர்கள் என கூறுகிறது இதில் 62 சதவீத வருமானம் அமெரிக்காவிலிருந்து தான் வருகிறது .
தற்போது இந்த 62% வருமானத்திற்கு தான் டிரம்ப் நிர்வாகம் ஆப்பு வைக்க தயாராகி வருகிறது . சிங்கானியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ஒருவரான ரோகித் ஜெயின் அமெரிக்க அரசின் இந்த சட்டம் இந்திய நிறுவனங்களின் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார். புதிதாக ஒப்பந்தம் பெறுவது பாதிக்கப்படும் என தெரிவிக்கிறார். இந்தியா ஐடி நிறுவனங்கள் இனி அமெரிக்க சந்தை தாண்டி மற்ற சந்தைகளிலும் வாய்ப்பினை தேட வேண்டிய சூழல் உண்டாகிருப்பதாக கூறுகிறார்.
சில சமயங்களில் இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஐடி சேவை வழங்க வேண்டிது இருக்கும் இல்லை என்றால் இந்த வரி விதிப்பில் ஒரு கணிசமான தொகையை இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும் என கூறுகிறார்.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications