இந்திய ஐடி சேவை துறை மிகவும் சோதனை மிக்க காலக்கட்டத்தில் உள்ளது, ஒருபக்கம் அமெரிக்க பொருளாதாரத்தில் மந்த நிலை, மறுபுறம் பிரிட்டன் நாட்டில் ரெசிஷன் அச்சம், ஐரோப்பாவில் வட்டி விகித உயர்வால் தேக்கம் நிலை, மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் இஸ்ரேல் போர் காரணமாக நிலையற்ற தன்மைக்குள் நுழைந்துள்ளது.
இதனால் இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா, எல்டிஐமையின்டுட்ரீ போன்ற முன்னணி நிறுவனங்களால் புதிய வர்த்தகத்தை பெற முடியவில்லை. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வட்டி விகித உயர்வால் நிறுவனங்கள் டெக் சேவைக்காக செலவு செய்வதை பெரிய அளவில் குறைந்துள்ளதால் பல திட்டங்கள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஐடி நிறுவனங்கள் எப்படியெல்லாம் செலவுகளை குறைத்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கூட்டி காட்டுவது என்பதில் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இதேபோல் தற்போது நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களை எப்படி முழுமையாகவும், சிறப்பாகவும் பயன்படுத்திக்கொள்வது என்பதில் தீவிரமாக உள்ளது.
இதன் படி ஐடி சேவை நிறுவனங்களுக்கு தற்போது இருக்கும் அதிகப்படியான செவவுகள் என்றால் இது ஐடி ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் தான். குறிப்பாக செப்டம்பர் காலாண்டில் ஐடி நிறுவனங்களில் வருவாய் வளர்ச்சியை காட்டிலும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள செலவுகள் அதிகரித்துள்ளது.
ஐடி சேவை நிறுவனங்களின் மொத்த வருவாயில் சம்பளத்திற்கான செலவுகளின் பங்கீடு மட்டுமே செப்டம்பர் மாதத்தில் 56.6 சதவீதமாக உள்ளது. இது ஜூன் காலாண்டில் 56.9 சதவீதமாக இருருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை நிறுவனத்தின் அளவில் பார்க்கும் போது டிசிஎஸ் 58.8 சதவீதமும், ஹெச்சிஎல் 57.2 சதவீதமும், இன்போசிஸ் 53.8 சதவீதமாக உள்ளது. விப்ரோ வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. Wage Cost அதாவது சம்பள செலவுகள் அதிகரிப்பு என்பது ஊழியர்களை தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை என்பதை காட்டுக்கிறது.
ஐடி சேவை நிறுவனங்களில் 4- 10 வருட அனுபவம் கொண்ட ஊழியர்கள் தற்போது 30 சதவீத சம்பள உயர்வுடன் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களான GCC-க்கு மாறி வருகின்றனர். இத்தகைய ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ள இந்திய ஐடி நிறுவனங்கள் கூடுதல் சம்பள உயர்வை கொடுத்து தக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications