இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகவும் போராட்டம் நிறைந்த காலமாக இருக்கும் வேளையில் வருமான அளவுகளையும், வர்த்தகத்தை காப்பாற்றும் நோக்கில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தனது ரூட்டை மாற்றியுள்ளது.
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அமெரிக்கா தான் மிகவும் முக்கிய வர்த்தக சந்தையாக இருந்த நிலையில் அமெரிக்க பொருளாதாரதத்தில் பணவீக்க உயர்வால் பென்ச்மார்க் வட்டி விகிதம் உயர்த்தி விலைவாசி மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் ஷட்டவுன் பிரச்சனை இருந்த நிலையில் தற்போது Stagflation பிரச்சனை உருவாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் கார்பரேட் நிறுவனங்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் செலவு செய்வதை குறைத்துள்ளனர்.

இதன் எதிரொலியாக இந்திய ஐடி நிறுவனங்களால் அமெரிக்காவில் புதிய வர்த்தகத்தை பெற முடியாமல் உள்ளது. இதனால் 245 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடி சேவை துறைக்கு தற்போது ஐரோப்பா முக்கிய வர்த்தக சந்தையாக மாறியுள்ளது. ஐரோப்பா என்பது அக்சென்சர், கேப்ஜெமினி போன்ற நிறுவனங்களின் ஹோம் கிரவுண்டாக இருக்கும் நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் படையுடன் நுழைந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தக மற்றும் ஐரோப்பிய வளர்ச்சியை ஐரோப்பிய சந்தையிலும் குறிப்பாக பிரிட்டன் நாட்டிலும் பெற்று வேகம் வளரும் சந்தையாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மாறியுள்ளது.
இதில் முக்கியமாக செப்டம்பர் காலாண்சில் டிசிஎஸ் பிரிட்டன் சந்தையில் 10.7 சதவீத வளர்ச்சியும், வட அமெரிக்காவில் 0.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதேபோல் இன்போசிஸ் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் 10.7 சதவீத வளர்ச்சியும், வட அமெரிக்காவில் 1.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதைவிட முக்கியமாக இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை பங்கீட்டில் ஐரோப்பிய வர்த்தகம் ஓரே வருடத்தில் 24.7 சதவீதத்தில் இருந்து 26.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் வர்த்தக பங்கீடு 62.5 சதவீதத்தில் இருந்து 61.1 சதவீதமாக குறைந்துள்ளது.
ஹெச்சிஎல் டெக் பங்கீடு செப்டம்பர் காலாண்டில் அதன் சந்தை பங்கீடு 27.5 சதவீதத்தில் இருந்து 28.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தக பேஸ்மென்ட் ஐரோப்பாவுக்கு மாறுவதாக தெரிகிறது. இதன் மூலம் இனி இந்திய ஐடி ஊழியர்கள் அதிகளவில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆன்சைட் செல்ல வாய்ப்புகள் அதிகம்.


Click it and Unblock the Notifications