டெக் துறையில் சமீபத்திய காலமே பணி நீக்கம் என்பது மிக மோசமான ஒன்றாக இருந்து வருகின்றது. இது சர்வதேச அளவில் இருந்தாலும் இதனால் அதிகம் பாதிக்கபட்ட ஊழியர்களில் இந்தியர்கள் அதிகம் எனலாம்.
கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட டெக் ஜாம்பவான்கள் கூட, பணி நீக்க நடவடிக்கையினை செய்துள்ளன. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இந்தியாவில் பணி நீக்கமாக இருந்தாலும் கூட அது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்காது. இது விசா மூலம் அமெரிக்காவின் பணியாற்றிய ஊழியர்கள், 60 நாட்களில் புதிய வேலை தேட வேண்டும். இல்லையெனில் தங்களது சொந்த ஊர் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனலாம்.
ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி
இது குறித்து சமீபத்திய காலமாகவே சமூக வலைதளங்களில் பரவலான கருத்துகளை காண முடிந்தது எனலாம். பலரும் தங்களது நெருக்கடியான சூழலை விவரித்திருந்தனர். ஆனால் இப்படி ஒரு நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இந்திய ஐடி நிறுவனம் ஒன்று மிகப்பெரிய பரிசினை அதன் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியினை அளித்துள்ளது எனலாம்.
கார் பரிசு
குஜராத்தினை சேர்ந்த ஐடி நிறுவனமான டிரித்யா டெக் என்ற ஐடி நிறுவனம் 13 ஊழியர்களுக்கு, 13 கார்களை பரிசாக வழங்கியுள்ளது. சமீபத்தில் தான் இந்த நிறுவனம் இதன் 5 ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடியது.
இது குறித்து டிரித்யா டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் மராந்த், தனது பயணம் தொடங்கியதில் இருந்து தன்னுடன் இருக்கும் ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இனியும் பரிசு உண்டு
நிறுவனத்தினை வளர்க்க அவர்களின் முந்தைய வேலையை விட்டு விட்டு தன்னுடன் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆக அவர்களுக்கு இந்த காரினை பரிசாக அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த கலாசாரம் இனியும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு கலாச்சாரம்
சமீபத்திய காலமாகவே இந்தியாவில் ஊழியர்களுக்கு கார் பரிசாக அளிக்கும் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டில் சென்னை நிறுவனங்கள் சிலவும் தங்களது ஊழியர்களுக்கு, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக காரினை பரிசாக வழங்கியது நினைவுகூறத்தக்கது.
வெளி நாடுகளிலும் சேவை
டிரித்யா டெக் நிறுவனம் ஒரு சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனமாகும். இது குறிப்பாக இ-காமர்ஸ், வெப் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் என பல சேவைகளை செய்து வருகின்றது. இந்த நிறுவனம் அகமதாபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும், ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் தனது சேவையினை செய்து வருகின்றது.
டெக் துறையில் இந்தியாவின் பங்கு
அகமதாபாத் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது சர்வதேச அளவில் பணி நீக்கத்தினை செய்து வந்துள்ள நிலையில் வந்துள்ளது. இது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் ஆறுதலை கொடுத்துள்ளது. இது இந்தியா டெக் துறையில் அடுத்த கட்டத்தினை நோக்கி சென்று கொண்டுள்ளதை காட்டுகின்றது. இனி அமெரிக்கா எல்லாம் அதிகம் தேவை இருக்காது. இதுபோன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அதிகரித்தாலே அது இந்திய ஊழியர்களுக்கு போதுமான ஒன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications