மோசமான நிலையில் Infosys, Wipro.. ஒட்டுமொத்த ஐடி துறையும் ஆடிப்போனது..!!

இந்திய ஐடி சேவைத் துறை நிறுவனங்கள் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. சொல்லப்போனால் 2022க்கு பின்பு மோசமான வருடத்தையும், 2008 உலகளாவிய நிதி நெருக்கடிக்கு பின்பும் மோசமான காலகட்டங்களில் ஒன்றாக 2026 திகழ்கிறது. இந்தியப் பங்குச்சந்தையில் ஐடி துறை தான் மிகவும் மோசமாகச் செயல்படும் துறையாக இருந்து வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் நாட்டின் 2வது மற்றும் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனங்களாக இன்போசிஸ், விப்ரோ பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்தனர். இவ்விரு நிறுவனப் பங்குகளின் சரிவின் காரணமாக ஒட்டுமொத்த ஐடி சேவைத் துறையும் இன்று சரிவைப் பதிவு செய்துள்ளது.

மோசமான நிலையில் Infosys, Wipro.. ஒட்டுமொத்த ஐடி துறையும் ஆடிப்போனது..!!

இன்போசிஸ் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 1000 ரூபாய் என்ற முக்கிய அளவீட்டை இழந்து 980 ரூபாய் வரையில் சரிந்து பங்கு முதலீட்டாளர்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கடைசியாக 980 ரூபாய் அளவீட்டை இன்போசிஸ் அக்டோபர் 2020ல் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது, ஆனால் ஜூலை மாதம் இன்போசிஸ் பங்குகள் 1000 ரூபாய்க்குக் கீழ் இறங்கினாலும் வேகமாக மீண்டு வந்தது.

இதேபோல் விப்ரோ நிறுவனத்தின் பங்குகளைப் பார்த்தால் 3 சதவீதம் வரையில் சரிந்து ஒரு பங்கு விலை 156 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் விப்ரோ நிறுவனப் பங்குகள் செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 15 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இன்போசிஸ், விப்ரோ பங்குகளில் ஏற்பட்டு உள்ள சரிவு என்பது ஒட்டுமொத்த ஐடி துறையைப் பாதித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மூலம் பெரும் பாதிப்புக்குள்ளான ஐடி சேவைத் துறை பங்குகள் தற்போது ஏஐ துறையின் வளர்ச்சியும் மங்கியதால் கூடுதலாகப் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

இதோடு ஐடி சேவைத் துறையில் பில்லிங் முறை பெரிய மாற்றத்தைக் கண்டு வருவதாலும், அதிக எண்ணிக்கையில் பிரஷ்ஷர்களை தேர்வு செய்து வந்த ஐடி நிறுவனங்கள் தற்போது திறன் வாய்ந்த அதிகாரிகளை பணியில் சேர்க்கத் துவங்கியதால் சம்பளம் வாயிலாக லாப அளவீடுகள் குறைந்து வருகிறது.

மேலும் ஏஐ சேவை அளிப்பதற்காக ஏஐ கட்டமைப்பை உருவாக்க பெரும் முதலீடுகள் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் இதுவும் பிரச்சனையாக மாறுகிறது. அடுத்த முக்கிய விஷயமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் நிறுவனங்கள் செலவு செய்வதைக் குறைத்துள்ளது.

இதேபோல் பத்திர முதலீட்டில் அதிகப்படியான முதலீடுகள் கிடைக்கும் காரணத்தால் இந்திய ஐடி சேவை நிறுவனத்தில் பெரும் முதலீட்டாளராக இருந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அனைவரும் பங்குகளை விற்கத் துவங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+