இந்தியா தான் டாப்.. அதிலும் இந்திய ஐடி ஊழியகர்கள் தான் டாப்.. ஆச்சரியபட வைக்கும் அமெரிக்க தரவுகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குவால்காம், இன்ஃபோசிஸ் மற்றும் காக்ணிசன்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் ஹெச் 1 பி விசா மூலம் பணிபுரிபவர்கள் எத்தனை பேர் தெரியுமா? வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

கடந்த 2020ம் நிதியாண்டில் முதல் மூன்று காலாண்டுகள் எத்தனை பேர் ஹெச் 1 பி விசா மூலம் பணிபுரிந்துள்ளார்கள் என அமெரிக்காவின் தரவுகள் வெளியாகியுள்ளன.

மொத்தத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், ஹெச் 1பி விசா மூலம் 1,85,298 பேர் பணி புரிவதாகவும் அந்த தரவுகள் கூறுகின்றன.

ஹெச்1பி விசாவில் பணிபுரிபவர்களில் யார் அதிகம்?

ஹெச்1பி விசாவில் பணிபுரிபவர்களில் யார் அதிகம்?

இந்த தரவில் ஒரு நிறுவனம் பணியாளாரை ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு பணி மாற்றம் செய்வது என பலவும் உள் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு பணிபுரிபவர்களில் 29.5% பேர் சாப்ட்வேர் டெவலப்பர்ஸ், ஆப் டெலவலர்களாக உள்ளனர். இதே 11.4% பேர் கம்ப்யூட்டர் சிஸ்டம் பொறியாளர்கள் ஆவர். இதே சாப்ட்வேர் டெலவலப்பர்ஸ், சிஸ்டம் சாப்ட்வேர் டெலவலப்பர்கள் 8.5% பேரும், கம்ப்யூட்டர் சிஸ்டம் அனலிஸ்ட் 7.2% பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.

ஐடி துறைக்கே முக்கியத்துவம்

ஐடி துறைக்கே முக்கியத்துவம்

இதே எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர்கள் 6.5% பேரும், மேனஜ்மென்ட் அனலிஸ்ட் 2.2% பேரும், 1.9% கம்ப்யூட்டர் & இன்ஃபோ சிஸ்டம் மேனேஜர்ஸ் ஆகவும், ops research analysts, coputer programmers, statistics உள்ளிட்ட துறைகளில் முறையே 1.9% பேரும் பணியாற்றி வருகின்றனர். இதுவே மற்ற துறைகளில் 27.6% பேரும் பணியாற்றி வருகின்றனர். ஆக இதன் மூலம் நாம் தெரிகொள்ளும் ஒரு விஷயம் என்னவெனில் பல துறை சார்ந்தவர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்தாலும், முக்கியத்துவம் என்பது ஐடி துறைக்கே உண்டு.

அதிகம் பணியமர்த்திய நிறுவனம்

அதிகம் பணியமர்த்திய நிறுவனம்

இவ்வாறு ஹெச் 1பி விசா மூலம் அதிக ஊழியர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது குவால்காம் தான். இரண்டாவது இடத்தில் இருப்பது இன்ஃபோசிஸ், மூன்றாவது காக்ணிசன்ட் நிறுவனம். இதே 4வது இடத்தில் US corp நிறுவனமும், ஐந்தாவது இடத்தில் டெலாய்ட் கன்சல்டிங் நிறுவனமும் உள்ளது.

லிஸ்டில் இவர்களும் உண்டு

லிஸ்டில் இவர்களும் உண்டு

ஐந்தாவது இடத்தில் அமேசான். காம் சர்வீசஸ், அடுத்தது அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனமும், டிசிஎஸ், சென்சார் டெக்னாலஜி, NVIDIA கார்ப்பரேஷன், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கம் அதிக ஹெச் 1பி மூலம் பணியமர்த்தியுள்ளன. இந்த தரவானது 2020ம் நிதியாண்டில் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டு, மூன்றாவது காலாண்டில் இருந்து எடுக்கப்பட்ட தரவாகும்.

டாப் 5 விசாதாரர்கள்

டாப் 5 விசாதாரர்கள்

பல தரப்பினர் இந்த விசா மூலம் அமெரிக்கா சென்றாலும், இதில் அதிகம் போவது கம்ப்யூட்டர் அன்ட் மேத்தமேட்டிகள் பிரிவில் 56.9% பேரும், architecture and engineering பிரிவில் 8.8% பேரும், பிசினஸ் அன்ட் பைனான்ஷியல் ஆப்ரேஷன்ஸ் பிரிவில் 7.1% பேரும், மேனேஜ்மென்ட் 6.0% பேரும், கல்வி மற்றும் பயிற்சி பிரிவு, நூலகம் பிரிவில் 3.00% பேரும் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

என்னென்ன விசாக்கள் உள்ளது?

என்னென்ன விசாக்கள் உள்ளது?

அதிகளவில் பயன்படுத்தப்படுவது குடியுரிமை அல்லாத ஹெச் 1பி விசா - 67.8% பேராகும்.
எல் -1 விசா 7.5%
எஃப்- 1 விசா - 6.4%
Blank - 7.2%
Not in USA- 3.5%

யார் அதிகம் பயன்படுத்துகிறார்கள்?

யார் அதிகம் பயன்படுத்துகிறார்கள்?

மொத்தத்தில் அதிக குடியுரிமை பெறுவதில் 50.7% பேர் இந்தியர்கள் ஆவர்.
இதே சீனாவின் பங்கு 13.1% பேர்
மெக்ஸிகோ - 3.6% பேராகும். இதில் அதிகம் பேர் ஐடி துறையினர் ஆகும்.

ஆக அமெரிக்காவின் விசா நடவடிக்கையில் அதிகம் பயன் பெறுவதும் இந்திய ஐடி ஊழியர்களே. அதிகம் பாதிக்கப்படுவதும் இந்திய உழியர்களே..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian IT employees in top list of H1 B applications

Top H1B visa users.. Indian IT employees in top list of H1 B applications
Story first published: Thursday, August 20, 2020, 13:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X