இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி நிபுணர்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு என்றால் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடுவார்கள். ஆனால் அந்த மனநிலையை மாறி இருக்கிறது.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விசா நடைமுறைகளை கடுமையாக்கி வருகிறது. ஏற்கனவே அங்கே வேலை செய்பவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் தான் அமெரிக்காவில் வேலை செய்யக்கூடிய இந்தியாவை சேர்ந்து ஐடி நிபுணர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதா என சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த ஹெச்1பி விசா திட்டத்தை பயன்படுத்துகின்றன. இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி நிபுணர்கள் இந்த விசா மூலமாகவே அமெரிக்காவில் சென்று வேலை செய்கின்றனர். அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் வருகை தந்திருக்கும் வெளிநாட்டவர்களில் 70% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான்.
இந்த சூழலில் தான் டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா வழங்குவதிலும், கிரீன் கார்டுகள் மீதும் எடுத்து வரக்கூடிய மாற்றங்கள் அங்கே வேலையில் இருக்கும் இந்தியர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பலரும் இந்தியாவிற்கே திரும்பி விடலாமா என எண்ணுகிறார்களாம். இதனிடையே ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ள ஒரு பொறியாளர் அமெரிக்காவில் நான் பல ஆண்டுகளாக ஐடி துறையில் வேலை செய்கிறேன். என்னுடைய குடும்பமும் இங்கே செட்டிலாகி விட்டது. குழந்தைகள் தொடக்கப்பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கு வேலை தேடி சென்று விடுவோமா என்ற எண்ணம் தோன்றுகிறது என கூறுகிறார்.
ஆனால் அமெரிக்காவில் எனக்கு என்னுடைய வேலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் சமன் செய்வதற்கான நேரம் கிடைக்கிறது தரமான வாழ்க்கை கிடைக்கிறது ஆனால் இந்தியாவிற்கு சென்றால் இதுபோல தனிப்பட்ட வாழ்க்கையும் வேலையும் சமன் செய்வதற்கான நேரம் கிடைக்காது என்பதால் ஒரே குழப்பமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனர் நிச்சயமாக இது சிக்கலான ஒரு சூழல் தான் ஆனால் இரண்டில் எது சிறந்தது என்பதை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். உங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆவதற்கு முன்பு நீங்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டால் அவர்கள் இந்த சூழலுக்கு எளிதில் தங்களை மாற்றிக்கொள்வார்கள் இல்லையென்றால் மிகவும் கடினமானதாக இருக்கும் எனவே சீக்கிரம் முடிவு எடுங்கள் என கூறியிருக்கிறார்.
நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது உங்களுக்கு அங்கு ஒரு பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறது என தோன்றினால் இந்தியாவிற்கு திரும்புவது எந்த தவறும் இல்லை என ஒரு பயனர் அறிவுரை வழங்கியுள்ளார்.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications