இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்க வர்த்தக சந்தையை மட்டுமே அதிகமாக நம்பி இயங்கி வரும் வேளையில் புதிய ஹெச்1பி விசா மீதான 1,00,000 டாலர் கட்டணம் அறிவிப்பு, நேற்று வெளியான திறன் மற்றும் ஊதிய அடிப்படையிலான தேர்வு முறையை அமல்படுத்துவது தொடர்பாக வெளியான அறிவிப்பு ஆகியவை ஐடி ஊழியர்களையும், ஐடி நிறுவனங்களையும் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஹெச்1பி விசா பிரச்சனையை சமாளிக்க இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருந்து வருகிறது. இதற்கான பதில் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது.

ஹெச்1பி விசா இல்லாமல் இந்திய ஐடி சேவை நிறுவனங்களால் வர்த்தகம் செய்ய முடியாது என்பது நிதர்சனமாக உண்மை. இதேவேளையில் ஒவ்வொரு விசாவுக்கும் 1 லட்சம் டாலர் கொடுக்கவும் முடியாது என்பதும் நிதர்ணசம். இத்தகைய சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் தனது அமெரிக்க வர்த்தகத்திற்கு மிகவும் அவசியமான, முக்கியமான ஊழியர்களை மட்டுமே ஹெச்1பி விசா கீழ் அமெரிக்காவுக்கு அனுப்பும்.
அமெரிக்க வர்த்தகத்திற்கு தேவையான எஞ்சியுள்ள டெக் ஊழியர்களை அமெரிக்காவின் அண்டை நாடுகளில் அதிகளவில் பணியில் அமர்த்தும் NearShoring முறையை கையாள உள்ளது. அதாவது அமெரிக்காவின் நேரத்திற்கு ஒத்து உள்ள கனடா, லத்தின் அமெரிக்க நாடுகளில் இனி அதிகப்படியான இந்திய ஊழியர்களை பணியில் அமர்த்தும். இதன் மூலம் அமெரிக்க வர்த்தகத்தை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியும்.
இதேவேளையில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுடன் செலவுகளை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து மலிவான விலையில் சேவைகளை அளிக்க ஏதுவாக ஆன்ஷோர் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டு, ஆப்ஷோரில் இந்த பணிகளை மாற்ற பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. இதன் வாயிலாகவும் நிதி சுமையை குறைத்து அமெரிக்க வர்த்தகத்தை லாபகரமாக நடத்த முடியும். வாடிக்கையாளர்கள் ஆன்ஷோரில் தான் ஊழியர்கள் வேண்டும் என நினைத்தால் செலவுகளை பகிர்ந்துக்கொள்ளும் புதிய வர்த்தக மாடலையும் இந்திய ஐடி நிறுவனங்கள் முன் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் டிரம்ப் அரசு ஹெச்1பி விசா மீது எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும், இந்திய ஐடி நிறுவனங்கள் தனது புத்திசாலித்தனத்தின் மூலம் தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்ற உள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் டெக் ஊழியர்களின் சராசரி சம்பளம் 80000 டாலரில் இருந்து 1,20,000 டாலராக இருக்கும் வேளையில், ஒரு ஹெச்1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் போன்ற அதீத கட்டணத்தை செலுத்துவது இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தக மாடலுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கும்.

இந்த முறை முழுமையாக நடைமுறைக்கு வரும் வரையில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களாக டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா என அமெரிக்க வர்த்தக சந்தையில் வர்த்தகம் செய்யும் அனைத்தும் குறுகிய காலக்கட்டத்திற்கு நிதி ரீதியாகவும், ஆப்ரேஷன்ஸ் அளவில் பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அமெரிக்க கனவுடன் இருக்கும் இந்திய ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் அமெரிக்காவுக்கு செல்லவில்லை என்றால் கனடா, மெக்சிகோ, அர்ஜென்டினா போன்ற லத்தின் அமெரிக்க நாடுகளில் பணியில் சேரும் வாய்ப்புகள் உள்ளது.
இதேபோல் ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே உள்நாட்டு ஊழியர்களை அதிகளவில் பணியில் சேர்க்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதன் வாயிலாகவும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை குறையக்கூடும்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications