கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தைத் தாங்கி பிடித்த மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றாக விளங்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் மார்ச் காலாண்டில் கடந்த 5 வருடத்தில் இல்லாத அளவிற்கு அதிகளவிலான லாபம் மற்றும் வருமானத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக வர்த்தகம்
இக்காலகட்டத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தால் மார்ச் காலாண்டு முடிவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு டிமாண்ட்
இதேவேளையில் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்குச் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
ஊழியர்கள் வெளியேற்பு விகிதம்
இதனால் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் Attrition Rate மிகவும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இதைச் சமாளிக்கவும், ஊழியர்கள் வெளியேற்றத்தைத் தடுக்க அதிகளவில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை அளித்து வருகிறது. ஆனாலும் ஊழியர்கள் வெளியேற்றத்தை ஐடி நிறுவனங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதிகச் செலவுகள்
இதனால் ஐடி நிறுவனங்கள் புதிதாக ஊழியர்கள் பணியில் சேர்க்கும் போது அதிகச் சம்பளம், ஆட்சேர்ப்புக்கான பணிகள், கால தாமதம், செலவுகள் எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதேவேளையில் புதியதாகப் பல திட்டங்களை ஐடி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதால் ஊழியர்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது.
மார்ச் காலாண்டு முடிவுகள்
இந்நிலையில் ஏப்ரல் மாதம் நாட்டின் முன்னணி 3 ஐடி நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. ஏப்ரல் 12 டிசிஎஸ், ஏப்ரல் 14 இன்போசிஸ், ஏப்ரல் 15 விப்ரோ ஆகிய 3 நிறுவனங்களும் தங்களது வருடாந்திர அறிக்கையுடன் காலாண்டு முடிவுகளையும் வெளியிட உள்ளது.
5 வருட அதிக லாபம்
5 வருடத்தில் அதிகப்படியான லாபம் மற்றும் வருவாயை இந்திய ஐடி நிறுவனங்கள் பெறும் காரணத்தால் இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் வங்கி மற்றும் பிற துறை நிறுவனங்கள் அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட நிலையில் ஐடி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications