தொழில்நுட்ப முதலீட்டாளர், பில்லியனர், வென்ச்சர் கேப்பிட்டலிஸ்ட் என பல முகங்களை கொண்ட வினோத் கோஸ்லா இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகக் கருதப்படும் ஐடி துறைக்கு அளித்த கடுமையான எச்சரிக்கையால் ஒட்டுமொத்த ஐடி துறையும் தற்போது அதிர்ச்சியடைந்துள்ளது.
டெல்லியில் நடந்து வரும் இந்தியா ஏஐ இம்பேக்ட் சம்மிட் 2026 கூட்டத்தில் பேசிய வினோத் கோஸ்லா, 2050ஆம் ஆண்டுக்குள் மக்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாத நிலை வரலாம் என்று அதிர்ச்சியளிக்கும் தனது கணிப்பை தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வேகமாக வளர்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதார அமைப்புகளின் அடிப்படையை மாற்றியமைக்கும் இதனால் ஐடி சேவை துறை என்ற ஒரு துறையே காணாமல் போகும் நிலையும் உருவாகும் என்று வினோத் கோஸ்லா தெரிவித்தார்.

2050இல் வேலையில்லா உலகம்
இந்தியா ஏஐ இம்பேக்ட் சம்மிட் 2026 கூட்டத்தில் பேசிய வினோத் கோஸ்லா, செயற்கை நுண்ணறிவு ஒரு சாதாரண தொழில்நுட்ப மாற்றம் அல்ல, மாறாக அமைப்பு ரீதியான பெரும் மாற்றம் என்று கூறினார். இதனால் உலகளவில் 2050ஆம் ஆண்டுக்குள், காலம் காலமாக இருந்து வரும் வேலைவாய்ப்பு அமைப்பு தேவையில்லாமல் போகலாம் என்று தான் கணித்துள்ளதாக தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பம் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மட்டுமல்ல, மனித உழைப்பின் தேவையை மறுவரையறை செய்யும் என்று அவர் விளக்கினார். இந்தக் கணிப்பு, உலக அளவில் பொருளாதாரங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை சிந்திக்க வைக்கிறது.
இந்திய ஐடி துறைக்கு அச்சுறுத்தல்: 2030இல் ஷாக்
வினோத் கோஸ்லாவின் மிக முக்கியமான எச்சரிக்கை, இந்தியாவின் ஐடி சேவைகள் மற்றும் பிபிஓ துறையை நோக்கி உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியின் ஆதாரமாக இருக்கும் ஐடி அவுட்சோர்சிங் மாடல் முற்றிலும் காணாமல் போகலாம் என்று அவர் எச்சரித்தார்.
ஏஐ அமைப்புகளின் வேகமாக வளர்ச்சி, தற்போது ஐடி சேவை துறையில் இருக்கும் வொயிட் காலர் பணிகளை ஆட்டோமேட் செய்யப்படுவது மூலம் ஐடி துறை மற்றும் பிபிஓ துறை முற்றிலும் மாயமாகலாம் என தெரிவித்தார். இந்தத் துறையின் பல பிரிவுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அழிந்துவிடலாம் என அடித்து கூறுகிறார்.
இந்தியாவில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் பில்லியன் டாலர்கள் அளவிலான ஏற்றுமதி வருவாய் ஐடி சேவை துறையை சார்ந்துள்ளது, எனவே வினோத் கோஸ்லாவின் இந்த கணிப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே Anthropic நிறுவனர் 6-12 மாதத்தில் கோடிங் செய்யும் வேலை இருக்காது என கூறியது போல் மாற்றங்கள் நடந்து வருகிறது.
இந்தியாவுக்கு சவால்
பல தசாப்தங்களாக, இந்தியாவின் டெக் துறை வளர்ச்சி பாதையில் மென்பொருள் உருவாக்கம், பேக்-ஆஃபிஸ் செயல்பாடுகள் மற்றும் உலகளாவிய அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள் முக்கிய பங்கு வகித்து வந்தன.
இதை நம்பியே வர்த்தகம் செய்தால் விரைவில் இதுவே பலவீனமாக மாறலாம் என்றும் வினோத் கோஸ்லா எச்சரிக்கிறார், ஏனெனில் ஏஐ மாற்றத்திற்கு இந்தியா முழுமையாக தயாராகவில்லை என்றால், வர்த்தகம், வருமானத்தை இழக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார். இந்தியா தனது ஐடி நிறுவனங்களை ஏஐ இன்னோவேஷன் சுற்றி மறுவடிவமைக்க வேண்டும், இல்லையெனில் ஐடி துறை ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் என்று அவர் கூறினார்.
நீண்ட கால பணி
மேலும், ஒரு பெரிய நிறுவனத்தில் 15 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றுவது என்பது அந்த ஊழியரை பிற நிறுவனத்தால் பணியில் அமர்த்த முடியாத நபர் என்று கருத முடியும். வேகமாக மாறிவரும் ஏஐ உலகில், தொடர்ச்சியாக தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ளாத நிபுணர்கள் விரைவில் பழமையானவர்களாக கருதப்படுவார்கள் என தெரிவித்தார்.
டெல்லியில் நடக்கும் ஏஐ கூட்டம் இந்திய ஏஐ துறையின் வளர்ச்சிக்கு முக்கிய படியாக இருப்பது மட்டும் அல்லாமல் இந்திய ஐடி துறைக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்கிறது என்பது தான் உண்மை.
அடுத்த தசாப்தத்தில், இந்திய நிறுவனங்கள் ஏஐயைப் பயன்படுத்தி புதுமை செய்யுமா அல்லது அதனால் அதே Headcount மாடலை வைத்து கொண்டு பின்னுக்கு தள்ளப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications