இந்தியாவின் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவைத் துறை அடுத்த 5 வருடம் வரலாறு காணாத வளர்ச்சியைப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் கடந்த வாரம் வெளியிட்ட புதிய அறிவிப்பு தான்.
அமெரிக்கா - சீனா மத்தியில் இருக்கும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது, இதன் ஒரு பகுதி தான் டெக்னாலஜி.
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்தியாவிற்கும், இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் போட்டி தன்மையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் மூலம் பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை டிஜிட்டலாக மாற்றும் பணிகளைப் பெரிய அளவில் வேகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் சேவை
அமெரிக்காவில் இருக்கும் அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களும் தற்போது தங்களது வர்த்தகம் மற்றும் நிர்வாகத்தைக் கிளவுட் தளத்திற்கு மாற்றவும், சேவைகளை மேம்படுத்தச் செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற பல புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
ஆட்டோமேஷன் மாற்றம்
கொரோனா தொற்றுப் பாதிப்புக் காலகட்டத்திலேயே அமெரிக்காவின் பெரும்பாலான நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை ஆட்டோமேஷன் செய்யவும், டிஜிட்டல் மயமாக்கவும் முடிவு செய்துள்ளது. ஜோ பைடன் அறிவிப்புக்குப் பின் இந்தப் பணிகள் அனைத்தையும் வேகப்படுத்த முடிவு செய்துள்ளது அமெரிக்க நிறுவனங்கள்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்த மாற்றம் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த செலவில் டெக் சேவைகளைப் பெற வேண்டும் என்றால் 3ஆம் தரப்பு நிறுவனங்களைத் தான் அதிகளவில் விரும்புவார்கள். அந்த வகையில் தான் இந்திய ஐடி நிறுவனங்கள் இதுநாள் வரையில் அதிகளவிலான வர்த்தகத்தை அமெரிக்காவில் இருந்து பெற்றுவருகிறது.
ஜோ பைடன் அறிவிப்பு
தற்போது ஜோ பைடன் அறிவிப்புக்குப் பின்பு அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள மாற்றம் அடுத்த 5 வருடத்திற்கு இந்திய ஐடி நிறுவனங்கள் ஏராளமான வர்த்தகத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி வரலாற்று உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது.
எவரெஸ்ட் குரூப் கருத்து
இதுகுறித்து அமெரிக்க ஐடி ஆலோசகர் மற்றும் ஆய்வு நிறுவனமான எவரெஸ்ட் குரூப் சிஇஓ பீட்டர் பென்டார்-சாமுவேல் கூறுகையில், அமெரிக்க அரசின் அறிவிப்புக்குப் பின்பு டிஜிட்டல் ட்ரான்ஸ்பர்மேஷன் திட்டங்கள் எண்ணிக்கை சந்தையில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இத்துறையில் ஆதிக்கம் செய்யும் இந்திய ஐடி துறைக்கு இது சிறந்த வர்த்தக வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
5 வருடம் மெகா வளர்ச்சி
மேலும் இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்த 5 வருடம் மெகா சைக்கிள்-ஐ சந்திக்க உள்ளதாக எவரெஸ்ட் குரூப் சிஇஓ பீட்டர் பென்டார்-சாமுவேல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ஐடி துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
டாப் 5 ஐடி நிறுவனங்கள்
2021ஆம் ஆண்டில் இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது இப்புதிய மாற்றம் மூலம் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை இரட்டிப்பு வளர்ச்சி அடையவும் வாய்ப்பு உள்ளது.
150 பில்லியன் டாலர் ஐடி துறை
இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்படாத ஓரே துறை, ஐடி சேவைத் துறை மட்டுமே. 99 சதவீத ஊழியர்களும் வீட்டில் இருந்து பயணியற்ற முடியும் காரணத்தால் எவ்விதமான பாதிப்பு இல்லாமல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்திய ஐடி சேவை துறையின் மொத்த மதிப்பு 150 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications