2025ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதாவது ஜிடிபி-யில் ஐடி துறையின் பங்களிப்பு 10 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்தவரை ஐடி சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன.
அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் பார்க்கும்போது முதன்முறையாக 2025 ஆம் நிதியாண்டில் இந்திய ஜிடிபி-யில் ஐடி துறையின் பங்கு 10 சதவீதமாக இருக்கும் என பின்ஷாட்ஸ் கணித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் ஐடி துறையின் பங்களிப்பு 8.1 சதவீதமாக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டில் 9.5 சதவீதம் என அதிகரித்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டில் 7.7 சதவீதம் என குறைந்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. 2024 ஆம் ஆண்டில் 7 சதவீதம் என்ற அளவிலேயே ஐடி துறையின் ஜிடிபி பங்களிப்பு இருக்கிறது. இது 2025 ஆம் ஆண்டில் 10 சதவீதமாக வளரும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று கால மந்த நிலையிலிருந்து ஐடி நிறுவனங்கள் மீண்டு வருவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக பல்வேறு செயல்பாடுகள் ஆட்டோமேஷன் முறையில் தானியங்கு முறையாக மாற்றப்பட்டு இருப்பது ஆகியவை காரணமாக முன்வைக்கப்படுகிறது.
அதேபோல மேக்ரோ பொருளாதாரம் முன்னேற்றம், பல்வேறு கட்டமைப்புகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருவது ஆகியவை காரணமாக ஐடி நிறுவனங்களின் செயல்பாடு தற்போது அதிகரித்துள்ளது. அதேபோல ஐடி நிறுவனங்கள் பிரஷர்களை தேர்வு செய்யும் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது . இதன் காரணமாக இந்திய ஜிடிபியில் ஐடி நிறுவனங்களின் பங்கு கணிசமான அளவு உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய அங்கமாக ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன .லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளன. இந்தியாவில் இருந்து மென்பொருள் ஏற்றுமதியில் ஐடி நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை தந்துள்ளன. 2021 - 22 ஆம் நிதி ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 11.51 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
1998 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபியில் ஐடி துறையின் பங்களிப்பு வெறும் 1.2 சதவீதமாக தான் இருந்தது, அது தற்போது 7 சதவீதம் என்ற நிலையில் இருக்கிறது . அது இந்த ஆண்டிலேயே 10 சதவீதம் என உயரப்போவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் , எல்டிஐ , டெக் மகேந்திரா ஆகியவை முன்னணி ஐடி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications