அடேங்கப்பா.. ரூ.19 லட்சம் கோடி மாயம்..! ஐடி நிறுவனங்களும் நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!

இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூணாக இருந்து வரும் ஐடி சேவை துறை வரலாறு காணாத பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. குளோபல் ரெசிஷன் காலத்தில் ஏற்பட்ட தாக்கத்திற்கு இணையாக இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சியும், பங்கு மதிப்பும் பெரிய அளவில் சரிந்துள்ளது.

சமீபத்தில் அக்சென்சர் நிறுவனம் வெளியிட்ட வருவாய் கணிப்பு இந்திய சந்தையில் இருக்கும் ஐடி நிறுவனங்களை புரட்டிப்போட்டது. மேலும் ஏஐ சேவையால் புதிய வரத்தகம் கிடைப்பதில் மந்தநிலை உருவாகியுள்ளது வெளிப்படையாக அறிவித்துள்ளது. அப்படி வந்நதாலும் லாப அளவுகளும், தற்போதை வர்த்தக மாடலுக்கு ஒவ்வாத நிலையில் உள்ளது.

அடேங்கப்பா.. ரூ.19 லட்சம் கோடி மாயம்..! ஐடி நிறுவனங்களும் நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், கடந்த 2 வருடமாக தொடர்ந்து ஐடி பங்குகளில் உள்நாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பெரிய அளவிலான முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவன பங்குகள் தனது 52 வார உச்ச நிலையில் இருந்து 50 சதவீதம் லரையில் குறைந்துள்ளது.

இந்தியாவின் பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் பட்டியலில், முன்னிலையில் இருக்கும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எல்டிஐ மைண்டுட்ரீ ஆகியவற்றின் பங்குகள் தனது வரலாற்று உச்ச அளவில் இருந்து சுமார் 50 சதவீதம் சரிந்து உள்ளது.

இதன் மூலம் டாப் 10 ஐடி சேவை நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதன் உச்ச அளவில் இருந்து சுமார் 19.28 லட்சம் கோடி குறைந்துள்ளது, மேலும் டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகள் தற்போது 2020ஆம் ஆண்டின் குறைந்தப்பட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது.

உதாரணமாக டிசிஎஸ் பங்குகள் ஆகஸ்ட் 30, 2024ல் 4592.25 ரூபாய்க்கு வர்த்தகமான நிலையில் சுமார் 56 சதவீதம் சரிந்து 2033 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. டிசிஎஸ் மட்டும் சுமார் 9.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.

விப்ரோ 370 ரூபாயில் இருந்து 54 சதவீதம் குறைந்து 170 ரூபாய்க்கும், LTM பங்கு விலை 7589 ரூபாயில் இருந்து 53 சதவீதம் குறைந்து 3543 ரூபாய்க்கும், இன்போசிஸ் 50 சதவீதம் குறைந்து 2006 ரூபாயில் இருந்து 1006 ரூபாய் வரை சரிந்துள்ளது, ஹெச்சிஎல் 2012 ரூபாயில் இருந்து 1072 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

இந்திய ஐடி துறை சரிவுக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் அதன் வர்த்தக கோட்டையாக விளங்கும் வட அமெரிக்காவில் மோக்ரோஎக்னாமிக் நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் புதிய வர்த்தகம் கிடைப்பதிலும் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+