வேலை தேடுபவர்களுக்கு இது குட் நியூஸ்.. மான்ஸ்டர் செம அறிவிப்பு.. ஐடி, விவசாய துறை டாப்பு டக்கரு..!

இந்தியாவில் கொரோனாவின் காரணமாக வேலையின்மை விகிதம் என்பது வரலாறு காணாத அளவு அதிகரித்தது. கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கப்பட்ட நாடு தழுவிய லாக்டவுன், இன்று வரையிலும் சில பல கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுவதிலும் இன்றைய நாளில் மக்கள் எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வேலையின்மையே.

அதோடு ஒரு நாட்டின் வேலை வாய்ப்பு பெருகினாலேயே, அந்த நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதாகத் தான் அர்த்தம். அந்த வகையில் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதைத் தான் இந்த கட்டுரை சுட்டி காட்டுகிறது.

வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு

வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு

மான்ஸ்டர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாடு முழுவதும் தொடர்ச்சியாக வேலை சந்தை மேம்பட்டு வருகின்றது. குறிப்பாக ஐடி துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட சில துறைகள் கொரோனாவுக்கு முன்பை விட, தற்போது சிறப்பாக செயல்படுகின்றன.

விவசாயம் தான் டாப்

விவசாயம் தான் டாப்

கடந்த ஜனவரி 2020வுடன் ஒப்பிடும்போது சில துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மான்ஸ்டர்.காம் கூறியுள்ளது. குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில்கள் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில், கடந்த ஆண்டினை காட்டிலும் முறையே 15 சதவீதம் மற்றும் 2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை

தொலைத்தொடர்பு துறை

இதே டெலிகாம் மற்றும் ஐஎஸ்பி ( இண்டர்னெட் சர்வீஸ் புரவைடர்) துறைகள் நிலையானதாக உள்ளன. இது கடந்த ஜனவரி 2020வுடன் ஒப்பிடும்போது எந்தவித மாற்றமும் இல்லை. எனினும் கடைசி மூன்று மாதத்தில் மட்டும் தொலைத் தொடர்பு துறையில் 13 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

ஐடி துறையில் பணியமர்த்தல் அதிகரிப்பு

ஐடி துறையில் பணியமர்த்தல் அதிகரிப்பு

இதே ஐடி துறையில் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் மாதத்திற்கு மாதம் தேவை அதிகரித்து கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜனவரி 6 சதவீதம் பணியமர்த்தல் இருந்தாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றது. இந்த பணியமர்த்தலானது குறிப்பாக பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பெரிய நகரங்களில் காணப்படுவதாகவும் தரவுகள் காட்டுகின்றன.

வளர்ச்சி பாதை

வளர்ச்சி பாதை

இதே வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜனவரி மாதத்தில் 9 சதவீத வளர்ச்சியும் காணப்படுகிறது. இதே விவசாயம் சார்ந்த தொழில்துறையில் 7 சதவீத வளர்ச்சியும், ஐடி துறையில் 6 சதவீத வளர்ச்சியும், வங்கிகள் மற்றும் நிதி சேவைகளில் 6 சதவீத வளர்ச்சியும், இதே கெமிக்கல்ஸ், பிளாஸ்டிக்ஸ், பெயிண்டுகள், உரங்கள் உள்ளிட்ட சில துறைகளில் முறையே 5 சதவீத வளர்ச்சியும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+