கொரோனா தொற்றில் இருந்து இந்திய சந்தை வேகமாக மீண்டு வரும் நிலையில் இந்திய வேலைவாய்ப்பு சந்தை அனைத்து துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் பண்டிகை காலம் நெருங்கியுள்ள காரணத்தால் அனைத்து துறையிலும் அதிகளவிலான வர்த்தகம் உருவாக வாய்ப்பு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்திய வேலைவாய்ப்பு சந்தை அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 18 மாத உயர்வை அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு சந்தை
இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு சேவை நிறுவனமான டீம்லீஸ் செய்த ஆய்வில் சுமார் 41 சதவீத நிறுவனங்கள் டிசம்பர் காலாண்டில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளது. இது செப்டம்பர் காலாண்டு ஆய்வின் 38 சதவீத அளவீட்டை விடவும் அதிகமாகும்.
18 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக உயர்வு
இந்த எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் காலாண்டு வாரியா சராசரியாக வெறும் 18 சதவீதமாகவே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு காலாண்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருக்கும் காரணத்தால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தினமும் கிடைத்து வருகிறது.
650 நிறுவனங்கள்
டீம்லீஸ் நிறுவனம் இந்த ஆய்வை 21 வர்த்தகத் துறையைச் சேர்ந்த சுமார் 650 சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக ஐடி, எப்எம்சிஜி, கல்வி சேவை, ஈகாமர்ஸ், டெக் ஸ்டாடர்ட்அப், டெலிகாம், உற்பத்தி, இன்பரா, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் அடுத்த 3 மாதத்தில் உருவாக உள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் அனைத்து வர்த்தகத் துறையும் வேகமாகத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யதும், மேம்படுத்தியும் வருகிறது. இதனால் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் இந்திய சந்தையில் அதிகரித்துள்ளது.
என்டரி மற்றும் ஜூனியர் பிரிவு
இவை அனைத்திற்கும் மேலாக நடுத்தர மற்றும் உயர் பதவியில் வேலைவாய்ப்புகளைக் காட்டிலும் என்டரி மற்றும் ஜூனியர் பிரிவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
பெரு நகரங்கள்
மேலும் இந்த ஆய்வில் பங்கு பெற்ற 650 நிறுவனங்களில் பெரு நகரங்களில் இருக்கும் நிறுவனங்களில் 56 சதவீதம் அதிக ஊழியர்களை இந்த டிசம்பர் காலாண்டில் பணியில் சேர்க்க உள்ளதாகவும், 2ஆம் தர நகரங்களில் இதன் எண்ணிக்கை 42 சதவீதமாக உள்ளது என்றும் ஆய்வுகள் கூறுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications