செடான், ஹேட்ச்பேக் கார்களை ஓரம் கட்டிய எஸ்யூவி.. மக்கள் மத்தியில் புதிய மாற்றம்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தை வேகமாக மாறி வருவது போல் மக்களின் விருப்பமும் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முக்கியமான மாற்றங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த மாற்றத்தில் மக்களின் விருப்பம் தான் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆட்டோமொபைல் சந்தை

ஆட்டோமொபைல் சந்தை

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள், மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள வேளையில், மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள மாற்றம் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சிறிய ரகக் கார்கள்

சிறிய ரகக் கார்கள்

பொதுவாகவே இந்திய சந்தையே சிறிய ரகக் கார்கள் அதாவது ஹேட்ச்பேக் கார்களுக்கான சந்தை தான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனாலேயே இந்தியாவில் இருக்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் அனைத்தும் ஹேட்பேக் பிரிவில் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்து வந்தது. இதனால் விற்பனையிலும் ஹேட்ச்பேக் கார்கள் அதிகளவிலான ஆதிக்கம் செலுத்தும்.

எஸ்யூவி கார்கள்

எஸ்யூவி கார்கள்

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் கடந்த 2 முதல் 3 வருடத்தில் மக்களுக்கு எஸ்யூவி கார்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் விற்பனையும் அதிகமாகியுள்ளது. இந்த மாபெரும் மாற்றம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் இதுதான் முதல் முறை.

மக்களின் விருப்பம்

மக்களின் விருப்பம்

பொதுவாகக் கார்களின் விலையின் அடிப்படையில் கார் விற்பனை மாறுபடும், ஆனால் தற்போது மக்களின் விருப்பமே பெரிய அளவில் மாறியுள்ளதைச் செப்டம்பர் காலாண்டு விற்பனை அளவீடுகள் காட்டுகிறது. இதன் மூலம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

50 சதவீத ஆதிக்கம்

50 சதவீத ஆதிக்கம்

இந்தியாவில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த பயணிகள் வாகனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது எஸ்யூவி கார்கள் தான். இதுல் முக்கியமானது என்னவென்றால் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை சேர்த்தாலும் எஸ்யூவி அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளது.

3,67,457 எஸ்யூவி கார்கள் விற்பனை

3,67,457 எஸ்யூவி கார்கள் விற்பனை


இக்காலாண்டில் 3,67,457 எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இதேவேளையில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை 3,42,939 ஆக உள்ளது. இதன் மூலம் மக்களின் விருப்பம் பெரிய அளவில் மாறியுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் அனைத்துக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் இனி எஸ்பியூ கார் தயாரிப்பில் தீவிரம் காட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+