இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையும் சரி, ஆட்டோமொபைல் துறையும் சரி மிகப்பெரிய அளவிலான மாற்றம் நடந்துள்ளது. இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ள காரணத்தால் சந்தையில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை மிகப்பெரிய அளவிலான மாற்றம் நடந்துள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது சென்னை உட்பட டாப் 7 நகரங்களில் ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக 1 - 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறுது. இதேபோன்ற ஒரு மாற்றம் ஆட்டோமொபைல் துறையிலும் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் காஸ்ட்லியான கார்களின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக அசாதாரண வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்த ஆண்டு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொண்ட ஆடம்பர கார்கள் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 1 கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே காலகட்டத்தில் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில் தற்போது 6 கார்கள் விற்பனை செய்யப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதன் எதிரொலியாக ஆடம்பர கார் உற்பத்தியாளர்கள் 2025-ம் ஆண்டில் 24-க்கும் மேற்பட்ட புதிய மாடல்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளதால், இந்த வளர்ச்சி 2025ஆம் ஆண்டிலும் தொடர்வது மட்டும் அல்லாமல் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க கூடும்ம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல் வருடம் முழுவதும் 20500 கார்கள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில் 2025-ம் ஆண்டில் இதன் விற்பனை 50,000 எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ம் ஆண்டிற்கான மெர்சிடிஸ்-பென்ஸ் விற்பனை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், தொழில் வட்டார தகவல்களின்படி, இந்த ஆண்டு மட்டும் 13 சதவீத வளர்ச்சி உடன் 14,379 கார்களை விற்பனை செய்திருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் BMW நிறுவனம் இந்திய சந்தையில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2024-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் விற்பனை சுமார் 5% அதிகரித்து 10,556 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் ஆடம்பர கார்களின் விற்பனை அதிகரிக்க மிக முக்கியமான காரணம் தனிநபர் செல்வந்தர்களான UHNWI-களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். நைட் பிராங்க் நிறுவனத்தின் 'தி வெல்த் ரிப்போர்ட் 2024' படி, 2023 முதல் 2028 வரை UHNWI-களின் எண்ணிக்கை 13,263-லிருந்து 50% அதிகரித்து 19,908 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications