துபாய்: துபாய் என்ற உடனே வெயில் வாட்டி வதைக்கும் ஊர், மதுபானம் கிடைக்காது, பெண்களுக்கு வாய்ப்பு அளிக்காத நாடு என பொதுவான பல கருத்துகள் நிலவுகின்றன. அதையெல்லாம் உடைத்தெறியும் வகையில் ஒரு நபர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கிறது.
ரோஹித் மன்சாண்டா (Rohit Manchanda) என்பவர் துபாயில் வசிப்பது என்பது எப்படி இருக்கும் என்பதை விவரித்து தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில் துபாய் தொடர்பான 6 பாய்ண்டுக்களையும், தவறான கருத்துக்களையும் அவர் உடைத்தெறிந்துள்ளார். "நான் துபாயில் வசிக்கிறேன் துபாயில் வசிக்கிறேன். துபாய் பற்றி பல தவறான கருத்து நிலவுகிறது, வாருங்கள் அவற்றை எல்லாம் விவரித்து சரி செய்வோம்" என கூறியுள்ளார்.
முதலில் துபாயில் எப்பொழுதுமே வெயில் சுட்டு எரிக்காது என கூறியுள்ளார். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே வெப்பம் மிகுந்த மாதங்களாக இருக்கும். அப்போது 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரம் மற்ற மாதங்களில் மனிதர்கள் வாழ தகுந்த ஒரு வெப்பநிலை தான் நிலவும் என்ற உண்மையை வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது இங்கே மதுபானத்திற்கு தடை கிடையாது. இஸ்லாமியர் அல்லாதவர்கள் உரிமம் பெற்ற பார்கள் மற்றும் உணவகங்களில் மதுபானம் அருந்துவதற்கு அனுமதி உண்டு. வீட்டிலேயே மது அருந்த விரும்புபவர்கள் அதற்காக முதலில் விண்ணப்பம் செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை விவரித்துள்ளார்.
மூன்றாவது, பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் ஒரு நகரம் துபாய். துபாயும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு நாடு தான். பல்வேறு இடங்களில் பல்வேறு பணியிடங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணி செய்வதை நாம் பார்க்க முடியும் என கூறியுள்ளார்.
நான்காவதாக, துபாயில் அனைவரும் பேசக்கூடிய மொழி அரபிக் என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அப்படி கிடையாது பெரும்பாலான இடங்களில் ஆங்கிலம்தான் பரவலாக பேசக்கூடிய ஒரு மொழியாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
ஐந்தாவதாக, துபாயில் வசிப்பவர்கள் எல்லாமே மிகப்பெரிய சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அது அப்படி கிடையாது . இங்கே வசிப்பவர்கள் வழக்கமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை பெறுகின்றனர் ஒருவரது வருமானத்தைக் கொண்டு ஒரு டீசன்ட்டான வாழ்க்கையை இங்கே வாழ முடியும் என கூறியுள்ளார்.

ஆறாவதாக, துபாய் என்பது ஒரு நாடு அல்ல, ஒரு நகரம். யுஏஈ அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தின் கீழ் வரக்கூடிய ஒரு நகரம் தான் துபாய் எனக் கூறியுள்ளார்.
துபாய் தொடர்பான தவறான கருத்துக்களை போக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவானது ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றுள்ளது. வேகமாக பகிரப்பட்டும் வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications