ரூ.82,000 சம்பளம் எனக்கு போதவில்லை! யாராவது வேலை கொடுங்கள்! ரெட்டிட்டில் புலம்பும் நபர்!

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நிலையான வருமானம் இருந்தாலும், செலவுகள் அதிகரிப்பது கவலை தரும் விஷயமாக மாறியுள்ளது. சமீபத்தில் ஒரு இந்தியர் தனது 82,000 ரூபாய் மாத வருமானம் செலவுக்கு போதவில்லை என்று ரெட்டிட் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு கடன், குடும்பச் செலவுகள் என பல்வேறு காரணங்களால் கூடுதல் வருமானம் பெறும் நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். அவர்களுடைய நிலை என்ன என்பதையும் இந்த பதிவு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

ரெட்டிட் தளத்தில் ஒரு நபர் தனக்கு இரண்டாவதாக ஒரு வேலை தேவை என்று பதிவிட்டு இருக்கிறார். தனது நிலை குறித்தும் அந்தப் பதிவில் விளக்கியுள்ளார். "நான் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் வேலை செய்கிறேன். மாதம் ரூ. 82,000 சம்பாதிக்கிறேன். இருப்பினும் அதிக வீட்டுக் கடன் செலுத்த வேண்டியிருப்பதால் எனது வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை. கூடுதல் வருமானம் ஈட்டக்கூடிய ஐடியாக்களை தேடி வருகிறேன்" என்று கூறியிருந்தார்.

ரூ.82,000 சம்பளம் எனக்கு போதவில்லை! யாராவது வேலை கொடுங்கள்! ரெட்டிட்டில் புலம்பும் நபர்!

பப்ளிக் ஸ்பீக்கிங், கஸ்டமர் சர்வீஸ், கேன்வா மற்றும் பவர் பாயிண்ட்டுகளைக் கொண்டு டிசைனிங் செய்தல் ஆகியவற்றில் தனக்கு திறமை இருப்பதாகவும், மாதம் ரூ. 15,000 முதல் ரூ.20,000 வரை சம்பாதிக்க உதவும் வேலைகளை அவர் தேடுவதாகவும் கூறினார்.

ரெட்டிட் பயனர்களின் கேள்விக்கு பதில் அளித்த அந்த நம்பர், தனது ரூ. 46 லட்சம் வீட்டு கடனை திருப்பிச் செலுத்த சுமார் ரூ. 36,000 EMI செலுத்துவதாகவும் மிகக் குறைந்த அளவிலான வேலைகளை வழங்கும் ஒரு சிறிய நகரத்தில் வசிப்பதாகவும், குடும்ப கட்டுப்பாடுகள் காரணமாக தன்னால் இடம்பெற முடியவில்லை என்றும் தனது நிலை குறித்து விவரித்திருந்தார்.

ரூ.82,000 சம்பளம் எனக்கு போதவில்லை! யாராவது வேலை கொடுங்கள்! ரெட்டிட்டில் புலம்பும் நபர்!

அந்த நபரின் பதிவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தொடங்கினர். சிலர் தங்கள் ஆலோசனையையும் வழங்கினார். ஒரு நபர் திறனை மேம்படுத்தி வேலையை மாற்றுங்கள்! அவ்வளவுதான்! என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவர் யூடியூப் சேனலை தொடங்கலாம் அல்லது நீங்கள் ஃப்ரீலான்சராக வேலை செய்யலாம், ஃப்ரீலான்சராக வேலை செய்யும்போது சிலருக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். மூன்றாவது நபர் 82,000 என்பது குறைவாக தெரிகிறதா? என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

ரூ. 82,000 சம்பளம் இருந்தும் இரண்டாவதாக ஒரு வேலை தேவை என்று பதிவிட்டிருக்கும் கருத்துஇன்றைய பொருளாதார சூழலில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினையை நமக்கு உணர்த்துகிறது. பல்வேறு செலவுகள் காரணமாக வருமானம் இருந்தும் சிலர் கூடுதல் வருமான தேவைப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+